சென்னை பெண்களின் பாதுகாப்புக்காக தமிழக அரசு அறிமுகம் செய்கிறது! பிங்க் ஆட்டோ!

0
136
Chennai Tamil Nadu government introduces for the safety of women! Pink Auto!
Chennai Tamil Nadu government introduces for the safety of women! Pink Auto!

Pink Auto: சென்னையில் உள்ள பெண்களுக்கு இலவசமாக ஆட்டோ வழங்க தமிழக அரசு ரூ.1லட்சம் மானியம் வழங்கப்பட்டு வருகிறது.

தமிழக அரசு பெண்களின் நலம் மற்றும் பாதுகாப்பு கருதி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் அடிப்படையில் தற்போது பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பான பயணத்திற்கு சென்னையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை அரசு வழங்குகிறது. இதன் மூலம் 250 இளஞ்சிவப்பு  ஆட்டோக்களை பெண் ஓட்டுநர்களுக்கு வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு லட்சம் ரூபாய் தகுதி உடைய பெண்களுக்கு வழங்கபடுகிறது. தமிழக அரசு பெண்கள் நலம் கருதி எடுக்கப்பட்ட சில திட்டங்கள், பயணத்திட்டம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, தோழி விடுதிகள், கைம்பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்களுக்கான ஓய்வூதியத்தை உயர்த்தி வழங்கியது, புதுமைப்பெண் திட்டம் ஆகியவை ஆகும். இதன் மூலம்  பெண்களின் முன்னேற்றம் மற்றும் வாழ்வாதாரம் உயர்த்தப்படுகிறது. இந்த திட்டம் ஒரு  புதிய முன்னெடுப்பாக உள்ளது.

இத்திட்டத்தின் மூலம் பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பாக பயணிக்க, பெண் ஓட்டுநர்கள் மூலம் 250 ஆட்டோக்கள் இயக்கப்பட உள்ளது என தகவல் வெளியாகி உள்ளது. பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தும் வகையில் இளஞ்சிவப்பு ஆட்டோக்களை தமிழ்நாடு அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த திட்டத்திற்கு பெண்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். மேலும் இலவசமாக வழங்கப்பட்ட  ஆட்டோ -களில் GPS பொருத்தப்பட்டு இருக்கும். இந்த திட்டத்திற்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 23, 2024. முக்கியமாக இந்த திட்டத்திற்கு அப்ளை செய்ய வேண்டும் என்றால் அவர் சென்னையில் வசிப்பவராக இருக்க வேண்டும்.

Previous articleவிராட் கோலியை மிஞ்சிய ரிஷப் பண்ட்!! ஐசிசி வெளியிட்ட புதிய தகவல்!!
Next articleஎதிர்பார்த்த ஹீரோக்கள் திரைப்படம் வெளியாகவில்லை!! தீபாவளிக்கு  வெளியாகும் திரைப்படங்கள்!!