சென்னை அணி கேப்டன் தோனிக்கு அறுவை சிகிச்சை! நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!!

0
292
#image_title

சென்னை அணி கேப்டன் தோனிக்கு அறுவை சிகிச்சை! நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது!

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி அவர்களுக்கு அறுவை சிகிச்சை முடிந்ததாகவும் அவர் நலமுடன் உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றது.

முன்னாள் இந்திய கேப்டனும் இந்திய அணியின் விக்கெடீ கீப்பராக இருந்த மகேந்திரசிங் தோனி அவர்கள் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு உள்ளூர் தெடரான ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாகவும் செயல்பட்டு விளையாடி வருகிறார்.

நடப்பாண்டு ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் தனது 5வது கோப்பையை கைப்பற்றியது.

மகேந்திர சிங் தோனி அவர்கள் இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரின் அனைத்து போட்டிகளிலும் முழங்கால் வலியுடன் விளையாடி வந்த அவர் வலி காரணமாக ஓடி ரன்கள் எடுக்கவும் கஷ்டப்பட்டார்.

இந்நிலையில் ஐபிஎல் தொடர் முடிந்து மும்பை சென்ற எம் எஸ் தோனி அவர்களுக்கு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தோனி அவர்களின் இடது முழங்காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து அறுசிகிச்சை முடிந்த பிறகு எம் எஸ் தோனி அவர்கள் நலமுடன் இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

 

Previous articleதங்கலான் திரைப்படத்தின் புதிய அப்டேட்! இயக்குநர் ப ரஞ்சித் அவர்கள் அறிவிப்பு!!
Next articleஜெயிலர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு! கேக் வெட்டி கொண்டாடிய படக்குழு!!