வருமானவரித்துறை அதிரடியில் சிக்கிய முக்கிய நிறுவனம்!

Photo of author

By Sakthi

செட்டிநாடு குழுமத்தில் 23 கோடி ரூபாய்வரை பறிமுதல் செய்து இருப்பதாக வருமான வரித்துறை தெரிவித்திருக்கின்றது.

தமிழ்நாட்டை தலைமையிடமாக கொண்ட செட்டிநாடு குழும நிறுவனங்களில் ரூபாய் 700 கோடி வரை வரி ஏய்ப்பு நடந்திருப்பது வருமானவரி சோதனையில் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றது. கணக்கில் காட்டப்படாத 23 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல பகுதிகளிலும் மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி சோதனை செய்து வந்தார்கள். அதேபோல செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமாக வெளிநாடுகளில் 110 கோடி ரூபாய் வரையில் சொத்துக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது.

கடந்த 9ஆம் தேதி செட்டிநாடு குழுமத்திற்கு சொந்தமான 50 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை செய்தார்கள். தமிழ்நாட்டில் சென்ற வாரம் மதுரை ஹெரிடேஜ் குழுமம், ஏவிஎம் எர்த் மூவர்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டார்கள் .இதில் கணக்கில் வராத வகையில் பல கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்ததாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்க ஒன்று.