தொடர் கனமழைக்கு புதுவித காரணத்தை தெரிவித்த முதலமைச்சர்!

Photo of author

By Sakthi

தெலுங்கானாவில் கடந்த ஒரு வார காலமாக தொடர்மழை பெய்து வருகிறது இதன் காரணமாக, கோதாவரி ஆற்றின் சுற்று வட்டார பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியது. இதனைத் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் மழையால் பத்ராசலம் என்ற கிராமம் தற்போது வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளது.

53 அடி வரையில் மூழ்கலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் 70 அடி வரையில் அந்த பகுதி நீரால் சூழப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், வெள்ள பாதிப்புகளை அந்த மாநில முதலமைச்சர் சந்திரசேகர ராவ் பார்வையிட்டார்.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த சந்திரசேகரராவ் மேக வெடிப்பு என்பது புது நிகழ்வாக இருக்கிறது. மற்ற நாடுகளின் சதியாகவும் இது இருக்கலாம் என்று எங்களுக்கு செய்தி வருகிறது என அவர் கூறியிருக்கிறார்.

இது எந்தளவிற்கு உண்மை என்று தெரியவில்லை இதற்கு முன்னர் காஷ்மீர் பகுதியில் இதே போல மேக வெடிப்பு ஏற்பட்டது. அதற்கு பிறகு உத்தரகாண்டில் நடைபெற்றது, தற்போது தெலுங்கானாவில் நடைபெற்று இருக்கிறது என்று தெரிவித்தார்.

அதோடு அவர் வெள்ளை பாதிப்புகளை பார்வையிட்ட பின்னர் கோதாவரி ஆற்றில் காங்கைக்கு சாந்தி பூஜை செய்து வழிபட்டார், அதன் பிறகு அவர் எதூர் நகரத்தில் ஆய்வு செய்ததாக சொல்லப்படுகிறது.

அதோடு அந்தப்பகுதியில் இருக்கின்ற மக்களுக்கு தேவையான உணவுகளும், மருத்துவ முகாம்களும், ஏற்பாடு செய்ய தெலுங்கானா நிதியமைச்சர் ஹரிஷ் ராவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெலுங்கானாவின் முதல்வர் அலுவலகம் செய்தி ஒன்றை வெளியிட்டிருக்கிறது.