கிராமத்தில் பிறந்த ஏழை விவசாயியின் நாட்டை ஆள இயலும் என்று நிரூபணம் செய்தவர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இவர் முதல்வர் ஆனபின்பு தமிழகத்திற்கு பல திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார் என்று அமைச்சர் வேலுமணி தெரிவித்திருக்கின்றார்.
கோவை மாவட்டம் குரும்பபாளையத்தில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் பங்கேற்று கொண்ட உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டில் மருத்துவம் படிப்பதற்கு தேர்வான 15 மாணவ மாணவிகளுக்கு மருத்துவ படிப்பிற்கான சீருடைகள் உடன் தலா 25 ஆயிரம் நிதி வழங்கியிருக்கின்றார்.
அதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் எஸ் பி வேலுமணி ஐஏஎஸ் அதிகாரிகள், வழக்கறிஞர்கள், சட்டத்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆலோசனை நடத்தி அரசினர் பள்ளி மாணவர்கள் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கின்றார். அதோடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கிராமத்தில் பிறந்த விவசாயி நாட்டை ஆள முடியும் என்று நிரூபிக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டு வந்திருக்கின்றார் நிவர் புயலின்போது செம்பரம்பாக்கம் ஏரி நிறைந்து இருந்த நிலையிலும் மக்களை காப்பாற்றுவதற்காக நேரடியாக செம்பரம்பாக்கம் ஏரிக்கு சென்று முதல்வர் ஆய்வு செய்து இருக்கின்றார்.
கோயமுத்தூர் மாவட்டத்தில் அரசு ஒதுக்கீட்டில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு 21 மாணவர்கள் தேர்வான நிலையில் 15 பேருக்கு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்திருக்கின்றது எனவும் மீதமிருக்கின்றன ஆறு மாணவர்கள் காத்திருப்பில் இருப்பதாகவும் தெரிவித்த அமைச்சர் எஸ் பி வேலுமணி 15 மாணவர்களுக்கு கல்விக் கட்டணத்தை அரசே முழுவதுமாக ஏற்று கொள்ளும் என்று தெரிவித்தார்.