குறை கூறியே அரசியல் செய்பவர்களுக்கு எங்களை குறை சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லை…! கடும் கோபத்தில் முதல்வர்….

0
121

நீட் நுழைவு தேர்வை அறிமுகப்படுத்தியதன் மூலம் மாணவ மாணவிகளுக்கு துரோகமிழைத்த காங்கிரஸ் மற்றும் திமுக கூட்டணி 7.5 சதவீத இட ஒதுக்கீடு விவகாரத்தில் மட்டும் ஆளுநருக்கு அரசு அழுத்தம் தரவில்லை என்று குறை கூறுவதற்கு எந்த விதமான உரிமையும் கிடையாது என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார்.

இதுபற்றி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அரசினர் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் தனியார் பள்ளியில் படித்த மாணவ மாணவிகளுக்கும் இருவேறு சமூக-பொருளாதார பின்னணியை உடையவர்கள் அவர்கள் கல்வி பயிலும் பள்ளி வளரும் சூழல் பெற்றோர்களின் வருமானம் போன்றவற்றில் சில வேறுபாடுகள் இருக்கின்றன ஆகவே அவர்களை சமமான நிலையில் வைத்து பார்ப்பது என்பது சமூக நீதிக்கு எதிரான ஒன்றாகும் தமிழக அரசு பள்ளிகளில் படித்த மாணவ-மாணவிகள் அதிகமாக நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்தாலும் மதிப்பெண்கள் தரவரிசையில் அவர்களுக்கு உரிய மருத்துவ இடம் கொடுக்கப்படுவதில்லை ஆகவேதான் அரசுப்பள்ளியில் படித்த நான் தமிழக அரசு பள்ளியில் படித்த மாணவர்களுக்கு தனியாக இட ஒதுக்கீடு வாங்க வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக கடந்த 21 3 2020 அன்று சட்டசபையில் 110 விதியின் கீழ் அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் மருத்துவ படிப்பு படிக்க உள் இட ஒதுக்கீடு வழங்கப்படும் என்று அறிவித்தேன்.

இது தொடர்பாக ஆய்வு செய்து தமிழக அரசுக்கு தன்னுடைய பரிந்துரையை வழங்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி திரு கலையரசன் அவர்களின் தலைமையில் ஆணையம் ஒன்றை அமைத்து அதன் பரிந்துரையின் படி அமைச்சரவை ஒப்புதல் பெற்ற பின்பு 7.5 சதவீத இட ஒதுக்கீட்டு சட்ட முன்வடிவு சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தநிலையில் ஆளுநர் அவர்களின் ஒப்புதல் பெறுவதற்காக கடந்த 18 9 2020 அன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது இதனை அடுத்து நான் சென்ற 5 10 2020 அன்றைய தினம் மாண்புமிகு உயர் கல்வித்துறை அமைச்சர் மற்றும் சட்டம் நீதிமன்றங்கள் துறை அமைச்சர் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் ஆகியோருடன் ஆளுநர் அவர்களை நேரில் சந்தித்தபோது ஒரு பற்றி விளக்கி விட்டு சட்டத்திற்கு ஒப்புதல் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டுள்ளேன்.

இந்த இட ஒதுக்கீட்டு சட்ட மசோதாவை ஆளுநரின் ஒப்புதல் பெற வைப்பதற்காகவும் இதன் பலனை தமிழக மாணவர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற எண்ணத்திலும் இடைவிடாமல் செயல்பட்டுக் கொண்டிருக்கும் தமிழக அரசை பார்த்து குறை கூறும் எந்த ஒரு அருகதையும் ஸ்டாலின் அவர்களுக்கு இல்லை என்று தமிழக முதல்வர் தெரிவித்து இருக்கின்றார்.

Previous article2 நிமிடம் போதும்! ஆதார் அட்டையை Mobile- ல் Download செய்து விடலாம்! எப்படி?
Next articleMPஅண்ணனுக்கு ஒத்த செருப்பு பார்சல்! தருமபுரி எம்பி செந்தில்குமாரை விளாசிய நடிகர் பார்த்திபன்