துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு!

0
175
Chief Minister meets and praises the brave lioness!
Chief Minister meets and praises the brave lioness!

துணிச்சலாக செயல்பட்ட சிங்கப்பெண்ணுக்கு முதல்வர் நேரில் சந்தித்து பாராட்டு!

சென்னை டி.பி சத்திரம் பகுதியை சேர்ந்த உதயகுமார் என்ற 22 வயது இளைஞர் அப்பகுதியில் கல்லறை தோட்டத் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழையில் நனைந்துள்ளார். அதன் காரணமாக நேற்று வேலைக்கு வந்த உடன் வலிப்பு நோய் ஏற்பட்டுள்ளது.

அதன் காரணமாக அவர் அங்கேயே மயங்கி விழுந்து விட்டார் என்ற தகவலை அறிந்ததும், டி.பி சத்திரம் பெண் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி மற்றும் அவரது குழுவினர் அந்த இடத்திற்கு விரைந்து வந்தனர். மயங்கிக் கிடந்த உதயகுமாரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி பரிசோதனை செய்து பார்த்துவிட்டு, எவ்வித தயக்கமுமின்றி அவரை தனது தோளில் சுமந்து கொண்டு வெளியே வந்து, அதன் பின்னர் ஆட்டோ மூலம் அவரை சிகிச்சைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

ஒருவர் உயிருக்கு போராடும் அந்த சமயத்தில் மற்ற போலீஸ்காரரை உதவிக்கு அழைக்காமல், மற்றவர்களை எதிர்பார்க்காமல் அவரே களப்பணி ஆற்றி அதன் காரணமாக உயர் அதிகாரிகள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர். இந்த புகைப்படமும், செய்தியும் வெளியே பரவ பரவ பொதுமக்களும் அவருக்கு பலவிதத்தில் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் மயங்கி விழுந்த நபரை தோளில் தூக்கிச் சென்று மருத்துவமனையில் சேர்த்த பெண் இன்ஸ்பெக்டரை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் நேரில் அழைத்து பாராட்டு தெரிவிக்கவும் தவறவில்லை. அதன்பின் முதலமைச்சர் வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு தெரிவித்திருந்தார்.

முறிந்து விழுந்த மரத்தின் கீழ் சுயநினைவின்றி கிடந்த உதயா என்பவரை துணிவுடன் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து உயிர்பிழைக்க வைத்த பெண் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரியின் அர்பணிப்பிற்கும், அவரது கடமை உணர்விற்கும் மகத்தான பணிக்கும் நெஞ்சார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறேன்.
காவல்துறை உங்கள் நண்பன் என்பதற்கு ஏற்ப கம்பீரமாகவும், கருணை உள்ளத்துடனுன் தாங்கள் மேற்கொண்ட பணி காவல்துறையில் உள்ள அனைவருக்கும் பெருமையையும், ஊக்கத்தையும் அளிக்கும். சட்டத்தையும் மக்களையும் காக்கும் பணி தொடரட்டும் என்று தெரிவித்து இருந்தார்.
Previous articleஇவர்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும்! உறுதியளித்த அமைச்சர்!
Next articleராஜராஜசோழனுக்கு கொண்டாடப்படும் சதய விழா! பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த கலெக்டர்!