முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ.. மக்களுக்கு வெளியாகும் புதிய அறிவிப்பு!!

0
7
chief-minister-mk-stalin-holds-roadshow-in-salem-and-meet-people
chief-minister-mk-stalin-holds-roadshow-in-salem-and-meet-people

2026 சட்டமன்ற தேர்தலுக்காக அனைத்து கட்சிகளும் தயாராகி வரும் நிலையில் திமுக தனது கட்சியை பலப்படுத்தி வருகின்றது. இந்நிலையில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களை நேரில் சந்தித்து வருகின்றார்.

இது தொடர்பாக அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அந்த அறிவிப்பில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கின்றார். பெருந்துறையில் வேளாண் கண்காட்சியை தொடங்கி வைத்த பிறகு அவர் ஈரோடு மற்றும் சேலம் மாவட்ட எல்லையான பெரும்பள்ளம் பகுதியில் இருந்து மேட்டூர் வரை சுமார் 11 கிலோ மீட்டர் தூரம் ரோடு ஷோ நடத்தி மக்களை நேரில் சந்திக்கின்றார்.

மேட்டூர் அணையில் டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஈரோடு மாவட்டம் பெருந்துறை, விஜயமங்கலம் சுங்கச்சாவடி அருகே வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக மண்டல அளவிலான கண்காட்சி நடத்தப்படுகின்றது. அதில் அவர் கலந்து கொள்கின்றார்.

அதனைத் தொடர்ந்து வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் வீட்டு வசதி மற்றும் மதுவிலக்கு ஆயதீர்வுத்துறை அமைச்சர் சா முத்துசாமி முன்னிலையில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்படும். ஈரோட்டில் இருந்து சேலம் மாவட்டம் புறப்படும் முதலமைச்சர் மு க ஸ்டாலின் ரோடு ஷோ நடத்தி மேட்டூர் சுற்றுலா பயணியர் மாலையில் தங்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து வைக்கின்றார். சாலை மார்க்கமாக சேலம் இரும்பாலையில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி வளாகத்தில் நடக்கும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் மற்றும் புதிய திட்டங்கள் தொடக்க விழாவில் கலந்து கொள்கின்றார். அங்கு மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய பிறகு முடிவுற்ற திட்ட பணிகளையும் புதிய திட்ட பணிகளையும் தொடங்கி வைக்கின்றார்.

சேலம் மாவட்டத்திற்கு பல்வேறு புதிய அறிவிப்புகள் தற்போது வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleஅரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற கட்டணம்; அமைச்சர் மா சுப்ரமணியன் அளித்த விளக்கம்!!
Next articleகிராம உதவியாளர்களுக்கு பணி நியமன ஆணை; அரசு சொன்ன ஹேப்பி நியூஸ்!!