விபத்தில் சிக்குபவர்களை உடனடியாக மருத்துவமனையில் சேர்த்தால் அரசு சார்பாக கௌரவிப்பு முதலமைச்சர் ஸ்டாலின்

Photo of author

By Sakthi

தமிழகத்தின் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் சமீபத்தில் தொடங்கியது. சென்ற சனிக்கிழமை அன்று தமிழக வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.இதற்கு முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமையன்று பொது நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், தமிழக சட்டசபையின் நிதிநிலை அறிக்கை மீதான விவாதம் இன்று ஆரம்பமானது கேள்வி நேரத்தின்போது சேலம் மேற்கு தொகுதி பாட்டாளி மக்கள் கட்சியின் சட்ட சபை உறுப்பினர் அருள் தமிழ்நாட்டில் ஏற்படும் சாலை விபத்துகளை குறைப்பதற்காக அதற்கேற்ற நடவடிக்கை மற்றும் வழிகாட்டுதல்களை வகுக்க அரசு முன்வருமா? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், நான் எதிர்க்கட்சி வரிசையில் இருந்த போதே சாலை விபத்துக்கள் கவலையளிப்பதாக உரையாற்றினேன். ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் சாலை பாதுகாப்பில் கவனம் செலுத்தி வருகிறோம் இதனடிப்படையில், உயர்மட்ட குழு கூட்டத்தை கூட்டி என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் பேசிய அவர் அந்த உயர்மட்டக்குழு கூட்டத்தில் இன்னுயிர் காப்போம் என்ற உயிர் காக்கும் திட்டம் ஏற்படுத்தப்பட்டது. அதனடிப்படையில், விபத்தில் சிக்கியவர்களுக்கு 48 மணி நேர இலவச சிகிச்சையுடன் 5 அம்சத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதனை மேல்மருவத்தூர் சென்று நானே ஆரம்பித்து வைத்திருக்கிறேன் என தெரிவித்திருக்கிறார்.

மேலும் இந்தத் திட்டத்தின் படி அரசு மருத்துவமனைகளில் 29,142 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4,150 பேரும், சிகிச்சை பெற்றிருக்கிறார்கள்.இன்னுயிர் காப்போம் திட்டத்தின் கீழ் 33, 247 பேர் சிகிச்சை பெற்றிருக்கிறார்கள். இதன் மூலமாக 33 ஆயிரம் குடும்பங்கள் காப்பாற்றப்பட்டிருக்கிறது 29.50 கோடி செலவில் முழுவீச்சில் திட்டத்தை செயல்படுத்தியிருக்கிறோம் என்று தெரிவித்திருக்கிறார்.

மேலும் சாலை பாதுகாப்பை உறுதி செய்து சாலை விபத்தில் ஒருவர் கூட வழியாக விதத்தில் செயல்படுவோம் என்று உறுதி ஏற்போம் என தெரிவித்திருக்கிறார். பாமகவின் சட்டசபை உறுப்பினர் அருள் சாலை விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்ற சிகிச்சைக்காக அனுமதிக்கும் தன்னார்வலர்களை இந்த அரசு ஊக்குவிக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், சாலை விபத்தில் சிக்குபவர்களை கோல்டன் அவர்ஸ் என்றழைக்கக்கூடிய குறிப்பிட்ட நேரத்திற்குள் கொண்டு செல்பவர்களுக்கு நற்கருணை விருதுடன், 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது என்று ஸ்டாலின் தெரிவித்திருக்கிறார்.