பாராட்டிய முதலமைச்சர் ஸ்டாலின்!

0
151

கலை, அறிவியல், இலக்கியம், சட்டம், விளையாட்டு, சமூக சேவை, உள்ளிட்ட துறைகளின் சிறப்பாக தங்களுடைய பங்களிப்பை வழங்கியவர்களுக்கு மாநிலங்களவையின் நியமன உறுப்பினர் பதவியை வழங்கிய மத்திய அரசு கவுரவித்து வருகிறது.

தற்போதைய சூழ்நிலையில் உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ரஞ்சன் கோகாய் ராகேஷ் சின்ஹா உட்பட 5 பேர் நியமன உறுப்பினர்களாக இருந்து வருகிறார்கள்.

அதோடு காலியாக இருக்கின்ற இடங்களுக்கு உறுப்பினர்களை நியமனம் செய்வதற்கு மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், தமிழகத்தைச் சார்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களவை உறுப்பினராக மத்திய அரசு நியமனம் செய்திருக்கிறது.

 

இதற்கான அறிவிப்பை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நேற்று வெளியிட்டார். அதோடு இளையராஜாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார்.

இசை துறையில் அவர் செய்த அளவிட முடியாத சாதனைகளை அங்கீகரிக்கும் விதத்தில், இந்த பதவி வழங்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில், இளையராஜாவுக்கு மாநிலங்களவை நியமன பதவி வழங்கியிருப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இது குறித்து அவர் தன்னுடைய வலைதள பதிவில் தெரிவித்திருப்பதாவது இசையால் நம்முடைய உள்ளங்களையும், மாநிலங்களையும், ஆண்ட இசை ஞானி இளையராஜா அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராக சிறப்பாக செயல்பட வாழ்த்துக்கள் என புகழாரம் காட்டியிருக்கிறார்.

Previous articleபாஜகவின் முக்கிய பதவிகளை நிர்வகிக்கும் பயங்கரவாதிகள்! விசாரணையில் வெளிவந்த திடுக்கிடும்  உண்மை!
Next articleஅதிமுக பொதுக்குழு கூட்டம் நடைப்பெறுமா? உச்ச நீதிமன்றம் வெளிட்ட உத்தரவு!