மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு?

0
136

மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை குறித்து தமிழக முதல்வர் ஆய்வு

தமிழக முதல்வர்,இன்று மூன்று மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணி மற்றும் நலத்திட்ட பணிகளை பற்றி ஆய்வு நடத்தவுள்ளார்.

தமிழகத்தை பொறுத்தவரையில் கொரோனாத் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகின்றது.அதேபோன்று நாளுக்கு நாள் கொரோனாத் தொற்று தடுப்புபணியும் துரிதப் படுத்தப் பட்டு வருகின்றது.தமிழக முதல்வர் ஒவ்வொரு மாவட்டங்களாக சென்று கொரோனா பரவுதலின் தடுப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளப்படுகின்றனவா? என்பதை ஆய்வு செய்யது வருகின்றார்.இது மட்டுமின்றி ஒவ்வொரு மாவட்டத்திற்கும் விவசாய பெருமக்களுக்கும் ஏழை எளிய மக்களுக்கும், பயன்படும் வகையில் சில நலத்திட்ட பணிகளை துவக்கி வைக்கிறார்.

இந்நிலையில் இன்று அவர் வேலூர் திருப்பத்தூர் ராணிப்பேட்டை ஆகிய மூன்று மாவட்டங்களில்,கொரோனா தடுப்பு பணி மற்றும் நலத்திட்ட பணிகளை பற்றி ஆய்வு மேற்கொள்ள உள்ளார்.

Previous articleஒரே நாடு ஒரே தேர்வு : மத்திய அரசின் புதிய திட்டம்
Next articleவிவசாய நிலத்தில் கிடந்த பிளாஸ்டிக் டப்பா வெடித்து துண்டான பெண்ணின் விரல்கள்!