கடந்த வாரம் தமிழக நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டசபை கூடியது.சென்ற வெள்ளியன்று மாநில பொது நிதிநிலை அறிக்கையை மாநில நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார்இதனைத் தொடர்ந்து சென்ற சனிக்கிழமையன்று மாநில வேளாண் நிதிநிலை அறிக்கையை மாநில வேளாணமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
தொடர்ந்து கடந்த திங்கட்கிழமை முதல் பட்ஜெட் மீதான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.இதில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கேட்கும் கேள்விகளுக்கு ஆளும் கட்சியை சார்ந்த அமைச்சர்களும், முதலமைச்சரும், விளக்கம் கொடுத்து வருகிறார்கள்.
அதோடு அவ்வப்போது சட்டசபையில் பல நகைச்சுவை சம்பவங்கள் நடைபெற்று வருவதால் சட்டசபை கலகலப்பாக வருகிறது இதே போன்று நேற்று ஒரு சம்பவம் நடைபெற்றது.
அதாவது அதிமுகவின் சட்டசபை உறுப்பினர் ஒருவர் அதிமுகவின் நினைவு ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி அவர்களை புகழ்ந்து பேசிக் கொண்டிருந்தார். இதற்கு சபாநாயகர் எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் கேள்வியை மட்டும் கேளுங்கள் வீண் புகழாரம் வேண்டாம் என தெரிவித்தார்.
உடனடியாக அவை முன்னவரான துரைமுருகன் எழுந்து நின்று சபாநாயகர் அவர்களே, அவங்களே எப்போதாவதுதான் பேசுகிறார்கள் பேசிவிட்டுப் போகட்டும் விட்டுவிடுங்கள் என்று தெரிவித்தவுடன் சபாநாயகர் அப்பாவு சிரிப்பை அடக்க முடியாமல் சிரித்து விட்டார்.
அதோடு அவையில் அனைவரும் சிரிக்கத் தொடங்கினார்கள்.இந்த நிலையில், தமிழக சட்ட சபையில் உரையாற்றிய தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் சில விஷயங்களை குறிப்பிட்டு பேசினார்.
விருதுநகரில் இளம்பெண் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் உரிய விசாரணை நடத்தப்பட்டு வருகிறது அதோடு புகார் வந்தவுடன் 24 மணி நேரத்தில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் 4 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள்.
காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளின் கீழ் சம்பந்தப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்திருக்கிறார்கள். இந்த வழக்கில் போதுமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் இதுபோன்ற சம்பவங்கள் இனி வரும் காலங்களில் நடக்காத விதத்தில் கண்காணிக்கப்படும் என தெரிவித்தார்.
பொள்ளாச்சி சம்பவம் சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவங்கள் போல இல்லாமல் விருதுநகர் சம்பவத்தில் நீதி நிலைநாட்டப்படும் சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோருக்கும் உரிய தண்டனை பெற்று தரப்படும். இந்த வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்படுகிறது.
குற்றவாளிகள் மிக விரைவாக தண்டிக்கப்பட வேண்டும் என்பதற்காக வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிபிசிஐடி கண்காணிப்பாளர் முத்தரசி சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என தெரிவித்தார்.
60 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட இந்த வழக்கு தனி நீதிமன்றத்திற்குள் எடுத்ததுச் செல்லப்படும் அதோடு குற்றவாளிகளுக்கு விரைந்து தண்டனை கிடைக்கும் அதிகபட்ச தண்டனை பெற்று தரப்படும் என தெரிவித்தார்.
மேலும் விருதுநகர் பாலியல் வழக்கில் விரைந்து தண்டனை பெற்றுத் தருவதில் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவிற்கே முன்மாதிரியாக இருக்கும். இது போன்ற தவறு செய்பவர்களுக்கு ஒரு பாடமாக இந்த சம்பவம் அமையும் என்றும், பொறுத்திருந்து பாருங்கள் என்றும், அவர் தெரிவித்தார்.