இந்தியாவின் மருத்துவ தலைநகராக விளங்கும் தமிழகம்…! முதலமைச்சர் பெருமிதம்…!

Photo of author

By Sakthi

முதலமைச்சரின் மருத்துவக் காப்பீட்டுத் திட்டம் போன்ற திட்டங்களை தமிழக அரசு முனைப்புடன் முன்னெடுத்து வருகின்றது என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருக்கின்றார்.

இன்று சென்னை வடபழனியில் தனியார் மருத்துவமனை ஒன்றை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார் அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர் நோய்நாடி நோய்முதல் நாடி என்ற திருக்குறளின் அடிப்படையில் நலமான மாநிலமே வளமான மாநிலம் என்று திகழும் தமிழ்நாட்டில் பல முக்கிய அரசு திட்டங்களை தமிழக அரசு விரிவாக செயல்படுத்தி வருகின்றது முதல்வரின் மருத்துவ காப்பீட்டு திட்டம் முனைப்புடன் செயல் படுவதாக தெரிவித்திருக்கிறார்.

அதோடு கர்ப்பிணி பெண்கள் பயன்பெறும் வகையில் 18,000 கோடி ரூபாய் நிதியுதவி அளிக்கப்பட்டுள்ளது 254 ஆரம்ப சுகாதார நிலையங்கள் புதிதாக ஆரம்பிக்கப்பட்டு உள்ளனர் தமிழ்நாடு இந்தியாவின் மருத்துவ தலைநகரமாக திகழ்கிறது அனைவருக்கும் இலவச மருத்துவ சேவை கிடைப்பதற்காக தமிழக அரசு ஓய்வின்றி உழைத்து வருவதால் இந்தியாவின் முன்னுதாரணமான மாநிலமாக தமிழகம் இருக்கின்றது.

சென்ற ஐந்து வருடங்களாக தமிழகம் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் தொடர்ச்சியாக மத்திய அரசின் விருதினைப் பெற்று சாதனை படைத்து வருகின்றது தமிழ்நாட்டில் பதினோரு மருத்துவ கல்லூரிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு அதன் பணிகளும் தொடங்கியிருக்கின்றன கொரோனா காலத்திலும் அதிக அளவிலான பிரசவங்கள் அரசு மருத்துவமனைகளில் நடைபெற்று வருகின்றது பிரசவத்தின் பொழுது குழந்தைகளின் இறப்பு சதவீதம் குறைந்து இருக்கிறது என்றார் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி.