அமரன் படம் பார்த்த முதல்வர்!! நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!!

அமரன் படம் பார்த்த முதல்வர் மற்றும் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்த நடிகர் சிவகார்த்திகேயன்.  உலக நாயகன் கமல்ஹாசனின்,  “ராஜ்கமல் நிறுவனம்” தயாரிப்பில் நடிகர் சிவகார்த்திகேயன் ஹீரோவாக நடிக்கும் படம் தான் “அமரன்”. இந்த படம் தீபாவளி அன்று வெளியானது.  இப்படமானது “மேஜர் முகுந்த் வரதராஜன்” என்ற இந்திய இராணுவ வீரனின் உண்மை கதையை கொண்டு  படமாக்க பட்டதாகும்.அமரன் படம் பார்த்த முதல்வர்!! நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!!

எனவே  ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை கொண்ட படமாக இருந்து வந்த நிலையில், நேற்று தீபாவளி அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட்டது. இப் படத்தை தமிழக  முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் மற்றும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் குடும்பத்தினருடன்  படம் பார்க்க சென்றுள்ளார்கள். பிறகு இப் படத்தை பார்த்துவிட்டு வருகையில்  செய்தியாளர்கள் எழுப்ப அமரன் படம் தொடர்பான  கேள்விக்கு  “படம் மிகவும் நன்றாக இருக்கிறது”என்ற கருத்தை தெரிவித்தார் முதலமைச்சர். அமரன் படம் பார்த்த முதல்வர்!! நன்றி தெரிவித்த சிவகார்த்திகேயன்!!

இந்த நிலையில் அமரன் திரைப்பட செய்தியாளர் சந்திப்பில்  நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள்,  அமரன் படம் பார்த்த முதல்வர் அவர்களுக்கு நன்றி. மற்றும் துணை முதலமைச்சர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும்  படம் பார்த்துவிட்டு எங்கள் எல்லோரையும் முதல்வர் பாராட்டியது  நன்றாக இருக்கிறது என்றும்.  இது நம் நாட்டின் ராணுவ வீரரின் உண்மை கதை என்பதால்  “அமரன் படம் ” நம் முதல்வருக்கு மிகவும் பிடித்திருக்கிறது என்று கூறினார்.