முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதை செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! 

Photo of author

By Sakthi

முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதை செய்ய வேண்டும்! உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு! 

Sakthi

Chief Stalin should do this! The order issued by the High Court!
முதல்வர் ஸ்டாலின் அவர்கள் இதை செய்ய வேண்டும்!! உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு!!
உயர்நீதிமன்றம் விசாரித்து வந்த கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய வழக்கில் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் ஒரு  முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்த பலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அதன் பின்னர் சிகிச்சை பலனின்றி கள்ளச்சாரயம் குடித்தவர்களில் 67 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடந்த இந்த சம்பவம் குறித்தான வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் சென்னை உயர்நீதிமன்றம் முதல்வர் முக.ஸ்டாலின் அவர்களுக்கும் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கும் முக்கிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதாவது கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் மலைப்பகுதியில் தான் கள்ளச்சாராயம் தயாரிக்கப்படுவதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது. இதையடுத்து சென்னை உயர்நீதிமன்றம் இது தொடர்பாக “முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் கல்வராயன் மலைப்பகுதியை நேரில் சென்று ஆய்வு நடத்த வேண்டும். முதல்வர் செல்ல முடியாத பட்சத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்று ஆய்வு நடத்த வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
மேலும் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கள்ளச்சாரயம் குடித்த உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நலத்திட்ட உதவிகள் கிடைக்கின்றதா என்பதையும் உறுதி செய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.