அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய தாய் மற்றும் குழந்தை! நெகிழ்ச்சியில் காட்பாடி மக்கள்!

Photo of author

By Sakthi

வேலூர் மாவட்டம் காட்பாடி பள்ளிக்குப்பம் மேட்டு தெருவைச் சேர்ந்தவர் சதீஷ்குமார் இவருடைய மனைவி யுவராணி இவர் 9 மாத ஆண் குழந்தையுடன் காட்பாடி தொடர்வண்டி நிலையத்திற்கு வந்திருக்கிறார். அப்போது நடைமேடையில் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென்று தண்டவாளத்தில் தவறி விழுந்து விட்டது. இதனை கண்டு பதறிப்போன யுவராணி தண்டவாளத்தில் குதித்து தன்னுடைய குழந்தையை தூக்கிக் கொண்டு மேலே ஏறும்போது அந்த வழியே வந்த எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் தொடர்வண்டி யுவராணி மீது மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயத்துடன் யுவராணி கீழே விழுந்தார் கைக்குழந்தையும் தண்டவாளத்தில் விழுந்தது. உடனடியாக தொடர் வண்டி ஓட்டுநர் இஞ்சினை நிறுத்திவிட்டார். அதைத்தொடர்ந்து காட்பாடி ரயில்வே காவல்துறையினர் தண்டவாளத்தில் விழுந்து கிடந்த தாய் மற்றும் குழந்தையை மீட்டு எடுத்தார்கள்.

அதன்பிறகு கைக்குழந்தையுடன் இவர் ஐ கிரௌண்ட் அரசு மருத்துவமனை மருத்துவக் கல்லூரிக்கு சிகிச்சைக்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தார்கள். அங்கு முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு அதன் பிறகு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ரயில்வே தண்டவாளத்தில் கை குழந்தை மற்றும் தாய் உள்ளிட்டோர் சிக்கி அதிர்ஷ்டவசமாக காயங்களுடன் உயிர் தப்பிய சம்பவம் காட்பாடியில் பரபரப்பை உண்டாக்கியிருக்கிறது.