ஜோதிட சாஸ்திரத்தில் ஒருவரின் பிறந்த ராசி எவ்வளவு முக்கியமோ அதே அளவிற்கு அவர்களின் பிறந்த நட்சத்திரமும் முக்கியம். ஏனென்றால் சிறப்பான ராசிகளில் ஒருவர் பிறந்திருந்தாலும் அவரது நட்சத்திரம் சாதகமாக இல்லை என்றால் அவர்களது வாழ்க்கை அவ்வளவு சிறப்பாக இருக்காது. எனவே தான் நட்சத்திரமும் முக்கியம் என கூறுகிறார்கள். ஜோதிட சாஸ்திரத்தின் படி மொத்தம் 27 நட்சத்திரங்கள் உள்ளன. நட்சத்திரம் என்பது 27 கிரகணப் பிரிவுகளுள் ஒன்று. நீங்கள் பிறந்த நேரத்தில் சந்திரன் எங்கு உள்ளது என்பதை பொறுத்தே உங்கள் நட்சத்திரம் அமையும்.
ஒவ்வொரு நட்சத்திரமும் ஒவ்வொரு விதமான ஆளுமையையும், குணாதிசயங்களையும் கொண்டது. ஜோதிட சாஸ்திரத்தை படி சில நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் எங்கு சென்றாலும் தனித்தன்மையுடனும், ஆளுமை தன்மையுடனும், ஒரு தனி ராஜாவாக தெரிவார்கள். அவற்றுள் முதல் நட்சத்திரம் அஸ்வினி. இந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள். அஸ்வினி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எங்கு சென்றாலும் அங்கு நடக்கக்கூடிய செயலை தன் பக்கமாக இழுத்துக் கொள்வார்கள். அதாவது அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பவராக திகழ்வார்கள். மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இரண்டாவது நட்சத்திரம் பரணி நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மிகவும் அன்பானவர்களாக திகழ்வார்கள். எனவே அன்பின் மூலம் அனைவரையும் தன்வசம் இழுத்துக் கொள்வார்கள்.
மூன்றாவது நட்சத்திரம் பூசம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் புத்திசாலிகளாகவும், உயர்ந்த லட்சியம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இவர்கள் எளிதில் மற்றவரை நம்பக்கூடிய தன்மை உடையவர்கள்.
நான்காவது நட்சத்திரம் மகம் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அரசர்களின் குணத்தை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களின் ஆதிக்கமும், தலைமை பண்பும் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும். இந்த நான்கு நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளும் எதிர்காலத்தில் ஏதேனும் ஒரு சாதனையை படிப்பவர்களாக திகழ்வார்கள்.