பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே ராட்சத அணை!! இந்தியாவை மிரட்ட சீனா அடுத்த கட்ட நகர்வு!!

0
171
China has decided to build a dam across the Brahmaputra river
China has decided to build a dam across the Brahmaputra river

China – India:  பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே அணை கட்ட சீனா முடிவு.

இந்தியாவின் மிகப்பெரிய வற்றாத ஜீவ நதிகளாக இருப்பது கங்கை மற்றும் பிரம்மபுத்திரா நதியாகும். இந்த இரண்டு நதிகளும் இமய மலைத் தொடரில் இருக்கும் பனி மலைகள் நீர் ஆதாரமாக இருப்பதால் தான் வற்றாத ஜீவ நதியாக இருக்கிறது. இந்த நிலையில் சீனா இந்தியாவை அச்சுறுத்தும் வகையில் மிகப்பெரிய ராட்சத அனையை பிரம்மபுத்திரா அணியில் கட்ட சீன முடிவு செய்து இருக்கிறது.

பிரம்மபுத்திரா நதி திபெத்திய மலை தொடர்களில் இருந்து வருகிறது. இந்திய வடகிழக்கு மாநிலங்களுக்கு நீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு பேருதவியாக இருப்பது  பிரம்மபுத்திரா நதி. இந்த நதியின் குறுக்கே சீன அணை கட்டி நீர் மின் நிலையம் வாயிலாக மின்சாரம் தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகிறது.

இதனால் சீனா கட்டும் அணையில் இருந்து நீர் திறந்து விட்டால் மட்டுமே பிரம்மபுத்திரா நதியில் நீர் வரும் என்ற அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்திய வடகிழக்கு மாநிலங்கள் இதனால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இந்திய எல்லைகளில் ஊடுருவலை நடத்தி இந்தியாவுடன் அவ்வபோது சீன ராணுவத்தினர் மோதல் நடத்தி வருகிறார்கள்.

இந்தியாவுக்கு எதிராக செயல்படும் பாகிஸ்தான் நாட்டிற்கு ஆதரவாக சீன ராணுவம் மற்றும் பொருளாதார உதவிகளை செய்து வருகிறது. இது போன்ற செயல்களை செய்து இந்தியாவுக்கு அச்சுறுத்தல் நடத்தி வந்தது, தற்போது பிரம்மபுத்திரா நதியில்  அணை கட்டுவதன் வாயிலாக புதிய பிரச்சனையை இந்தியாவிற்கு கொடுக்கவுள்ளது சீன அரசு.

Previous articleஇந்திய அணி தோல்வியால் நிலைமை என்ன?? உலக டெஸ்ட் கோப்பை கனவு..என்ன செய்ய வேண்டும்!!
Next articleரோஹித் ஒரு சுயநலவாதி..ராகுலை இப்படி பண்ணிட்டாரு!! முன்னாள் வீரர் விளாசல்!!