என் மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம்! சித்ராவின் தாயார் கதறல்!

Photo of author

By Sakthi

என்னுடைய மகளின் மரணத்திற்கு ஹேமந்த் தான் காரணம் என சின்னத்திரை நடிகை சித்ராவின் தாயார் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

தினமும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லை கதாபாத்திரத்தில் நடித்து வந்த சித்ரா நேற்று அதிகாலை தற்கொலை செய்து கொண்டது அவருடைய ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கின்றது ஆனாலும் சித்ராவின் மரணத்தில் மர்மம் இருப்பதாக அவருடைய உறவினர்களும் நண்பர்களும் தெரிவித்து வருகிறார்கள்.

சித்ராவிற்கும் சென்னையை சேர்ந்த ஹேமந்த்ரவி என்பவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில் இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டதும் நேற்று தெரிய வந்திருக்கின்றது.

அவருடைய மரணம் தொடர்பாக சித்ராவின் தந்தை ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி காமராஜ் நசரத்பேட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார் இந்த புகாரின் பெயரில் உதவி ஆணையர் சுதர்சன் மேற்பார்வையில் காவல் ஆய்வாளர் விஜயராகவன் விசாரணை செய்து வருகின்றார்.

கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் இன்று காலை சித்ராவின் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது பிரேத பரிசோதனை அறிக்கையின் மூலமாக சித்ராவின் மரணத்திற்கான சந்தேகங்களுக்கு விடை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் காவல்துறையினர் பாண்டியன் ஸ்டோர் குழு, ஹேமந்த்ரவி, சித்ரா ஆகியோர் தங்கியிருந்த விடுதியின் ஊழியர்கள் ஆகியோரிடம் விசாரணை செய்து வருகின்றார்கள் விடுதியில் இருந்த கண்காணிப்பு கேமராக்களும் பறிமுதல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகின்றது.

சித்ராவும் ஹேமந்த்ரவியும் பதிவுத்திருமணம் செய்துகொண்ட காரணத்தால் ஆர்.டி.ஓ விசாரணையும் நடைபெற்று வருகின்றது இந்த நிலையில் தன்னுடைய மகளை கொலை செய்து விட்டதாக சித்ராவின் தாயார் பரபரப்பு குற்றம் சாட்டியிருக்கிறார் குடும்பத்தினர் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் என்னுடைய மகள் நல்லவரா கெட்டவரா என்பது உங்களுக்கு தெரியும் ஏனென்றால் அனைத்து சேனல்களிலும் வேலை பார்த்தவர் அவர் உடன் பதிவு திருமணம் நடந்தது இதன் காரணமாக எங்கள் வீட்டில் மூன்று நாள் அவர்கள் வீட்டில் மூன்று நாள் என்று இருந்து வந்தார்கள் கடந்த திங்களன்று மண்டபம் பார்த்தோம் ஹேமந்தும் எங்களுடன் வந்திருந்தார் நன்றாகத்தான் இருந்தார் நன்றாகத்தான் பேசினார் அதற்கு மேல் என்ன நடந்தது என்று தெரியவில்லை என் மகளை ஏதோ செய்து விட்டார் என்று தெரிவித்தார் சித்ராவின் தாயார்.

செவ்வாய்க்கிழமை இரவு 8 மணி அளவில் கூட சித்ராவிடம் பேசினேன் ஸ்டார் மியூசிக்கில் இருப்பதாக தெரிவித்தார் வீட்டிற்கு செல்வதற்கு நேரமாகும் என்று தெரிவித்தார் நான் சர்க்கரை நோயாளி என்ற காரணத்தால் மாத்திரை போட்டுக் கொண்டு அரை மணி நேரத்தில் உறங்கி விட்டேன் காலை 5:15 அளவில் அவருடைய மாமனார் போன் செய்தார் சித்ரா நம்மை மோசம் செய்து விட்டு போய் விட்டார் என்று தெரிவித்தார் இதனைத் தொடர்ந்து கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு ஓடினேன்.

சித்ரா தற்கொலை செய்பவர் கிடையாது யாராவது தற்கொலைக்கு முயற்சி செய்தால் கூட தைரியமாக இருக்க வேண்டும் என்று அறிவுரை சொல்பவர் அடித்து சாகடித்து இருக்கிறார் சித்ரா எங்கே சென்றாலும் நானும் உடன் செல்வேன் திருமணமானதும் ஹேமந்த் பத்திரமாக பார்த்துக் கொள்வார் என்று தான் நான் தைரியமாக இருந்தேன் ஆனாலும் இவ்வாறு செய்வார் என்று நினைக்கவில்லை நான் ஏமாந்து போய்விட்டேன் ஹேமந்த்ந்தை கைது செய்ய வேண்டும் அவரை விட்டுவிடக்கூடாது என்று குமுறுகின்றார் சித்ராவின் தாயார்.

கீழ்ப்பாக்கம் மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நிறைவுபெற்ற நிலையிலே சித்ராவின் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது சித்ராவின் உடல் இறுதிச் சடங்கிற்காக கோட்டூர்புரம் கொண்டு செல்லப்பட்டு இருக்கின்றது.