மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன்!! ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!!

Photo of author

By Sakthi

மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன்!! ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!!

Sakthi

Updated on:

Chris Jordan in Mumbai Indians!! A new record in the IPL series!!
மும்பை இந்தியன்ஸ் அணியில் கிறிஸ் ஜோர்டன்!! ஐபிஎல் தொடரில் புதிய சாதனை!!
நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக விளையாடி வரும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை சேர்ந்த கிறிஸ் ஜோர்டன் அவர்கள் புதிய சாதனை படைத்துள்ளார். மும்பை இந்தியன்ஸ் அணி விளையாடிய கடைசி போட்டியில் கிறிஸ் ஜோர்டன் விளையாடியதன் மூலமாக இவர் இந்த சாதனையை படைத்துள்ளார்.
நடப்பு ஐபிஎல் தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு 9 அணிகள் கடும் போட்டியில் விளையாடிக் கொண்டிருக்கின்றது. இதில் நேற்றைய போட்டியில் சென்னை அணிக்கு எதிராக தோல்வி பெற்றதை அடுத்து டெல்லி கேபிடல்ஸ் அணி நடப்பு ஐபிஎல் தொடரின் பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை முதல் அணியாக இழந்ததுள்ளது.
இதையடுத்து கிறிஸ் ஜோர்டன் அவர்கள் மும்பை அணிக்காக கடைசி போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். அதாவது மும்பை, சென்னை, பெங்களூரு அணிகளுக்காக விளையாடிய வீரர்களின் பட்டியலில் ஆறாவது வீரராக இவர் இடம் பெற்றுள்ளார். காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரை விட்டு விலகிய மும்பை அணி வீரர் ஜோப்ரா ஆர்ச்சருக்கு பதிலாக கிறிஸ் ஜோர்டன் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதனையடுத்து மும்பை அணி கடைசியாக விளையாடிய போட்டியில் கிறிஸ் ஜோர்டன் அவர்கள் விளையாடியதை அடுத்து இவர் அந்த சாதனையை படைத்துள்ளார். இதற்கு முன்னர் சென்னை, மும்பை, பெங்களூரு அணிகளுக்காக விளையாடிய வீரர்களின் பட்டியலில் டிம் சவுத்தி, ராபின் உத்தப்பா, கரண் சர்மா, ஆடம் மில்னே, பார்த்தீவ் பட்டேல் ஆகியோர் உள்ளனர்.