இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள குரோம்புக் மடிக்கணினி!!! மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று சுந்தர் பிச்சை அறிவிப்பு!!!

0
98
#image_title

இந்தியாவில் தயாரிக்கப்படவுள்ள குரோம்புக் மடிக்கணினி!!! மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று சுந்தர் பிச்சை அறிவிப்பு!!!

இந்தியாவில் கூகுள் நிறுவனத்தின் குரோம்புக் மடிக்கணினி தயாரிக்கப்படவுள்ளதால் குரோம்புக் மடிக்கணினி இந்திய மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும் என்று கூகுள் நிறுவனத்தின் சீயிஓ சுந்தர் பிச்சை அவர்கள் அறிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஃபிளெக்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் கடந்த 2020ம் ஆண்டு ஹெச்.பி நிறுவனம் தொடங்கப்பட்டது. அப்போது முதல் இந்தியாவில் தமிழகத்தில் ஹெச்.பி நிறுவனம் மடிக்கணினிகள், மேசை கணிப்பொறிகள் ஆகியவற்றை தயாரித்து வருகின்றது.

இதையடுத்து கூகுள் நிறுவனத்தின் பிரத்யேக இயங்குதளத்தை கொண்டு இலகுரக மடிக்கணினியான குரோம் புக் மடிக்கணினியை சென்னை ஸ்ரீபெரும்புதூரில் இயங்கி வரும் ஹெச்.பி தொழிற்சாலையில் தயாரிக்க கூகுள் நிறுவனம் ஹெச்.பி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்தது.

இது தொடர்பாக கூகுள் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சைஅவர்கள் எக்ஸ் பக்கத்தில் “கூகுள் நிறுவனத்தின் தயாரிப்பான குரோம் புக் கைகேயி மடிக்கணினியை இந்தியாவில் தயாரிக்க நாங்கள் ஹெச்.பி நிறுவனத்துடன் இணைந்துள்ளோம். இந்தியாவில் முதல் முறையாக குரோம் புக் தயாரிக்கப்படுகின்றது.

இந்தியாவில் குரோம் புக் தயாரிக்கப்படுவதால் இந்திய மாணவர்களுக்கு மலிவு விலையில் கிடைக்கும். மேலும் பாதுகாப்பான கணினி அனுபவம் எளிதாக கிடைக்கும்” என்று குறிப்பிட்டிருந்தார். ஹெச்.பி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளரும் இந்த தகவலை உறுதி செய்தார்.

மற்ற நிறுவனங்களின் இலக்க மடிக்கணினிகளை ஒப்பிடும் பொழுது கூகுள் நிறுவனத்தின் குரோம் புக் குறைவான விலையில் தான் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. தற்பொழுது 15990 வரை விற்பனை செய்யப்படும் குரோம் புக் இலகுரக மடிக்கணினியை இந்தியாவில் தயார் செய்யும் பொழுது இதன் விலை இன்னும் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous articleதென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான பயிற்சி போட்டி!!! நியூசிலாந்து அணி 7 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி!!!
Next articleஇப்படியெல்லாமா திமுகவினர் செய்ராங்க!!? லியோ ஆடியோ லாஞ்ச் குறித்து டிடிவி தினகரன் பேச்சு!!!