அண்ணாச்சி பட நடிகைக்கு சம்பளம் இத்தனை கோடியா?

Photo of author

By Sakthi

அண்ணாச்சி பட நடிகைக்கு சம்பளம் இத்தனை கோடியா?

Sakthi

தமிழ்நாட்டில் இருக்கின்ற பிரபலமான துணிக்கடைகளில் ஒன்றுதான் சரவணா ஸ்டோர்ஸ் தமிழ்நாட்டில் பல கிளைகளை தொடங்கி மிகவும் பிரம்மாண்டமாக காட்சி தருகிறது. இந்த துணிக்கடை விளம்பர படங்களில் அந்த கடையின் உரிமையாளர் சரவணன் அருள் நடித்திருந்தது சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கிண்டலுக்கு ஆளானது.

ஆனாலும் இதுவே அவருக்கு ஒரு கதாநாயகராக ஆவதற்கு வழியை ஏற்படுத்திக் கொடுத்துவிட்டது. கோலிவுட்டில் தன்னுடைய ஜோடியாக நடிப்பதற்கு ஹன்சிகா, தமன்னா, நயன்தாரா, என்று கோலிவுட்டின் முன்னணி நடிகைகளுக்கு அழைப்பு விடுத்திருக்கின்றார் சரவணன் அருள்.ஆனால் அவருடன் எந்த நடிகையும் நடிப்பதற்கு தயாராக இல்லை என சொல்லப்படுகிறது.

ஆனால் இந்த திரைப்படத்தில் கிளாமர் ராணியான ஊர்வசி ரவுடாலா நடிப்பதாக தெரிவிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னர் சரவணன் அருள் ஊர்வசியுடன் ரொமான்ஸ் செய்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி விட்டது.இந்த திரைப்படத்தில் நடிப்பதற்கு அவருக்கு 2 கோடி ரூபாய் சம்பளம் கொடுக்கப்பட்டிருக்கிறது. இதனை கேள்வியுற்ற நடிகைகள் பலரும் கவலை அடைந்துள்ளனர்.