pmk: பாமக இளைஞரணி தலைவர் நியமிப்பதில் அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே மோதல்.
பாமக கட்சியின் சிறப்பு பொதுக் குழுக் கூட்டம் புதுவை மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இக் கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் கட்சி தலைவர் அன்புமணி, கௌரவத் தலைவர் ஜி.கே மணி உள்ளிட்ட மாநில நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். இந்த செயற்குழுக் கூட்டத்தில் வன்னியர்களுக்கு உள் ஒதுக்கீடு உட்பட 30 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.
மேலும், 2026 சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 15 மாதங்கள் உள்ள நிலையில் சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு நிர்வாகிகள் நிர்வாகிகள் செயல்பட வேண்டும் என பேசினார் ராமதாஸ். இந்த நிலையில் பாமக மாநில இளைஞர் அணி தலைவர் பதவியை முகுந்தன் பரசுராமன் நியமித்ததில் அன்புமணி மற்றும் கட்சி தொண்டர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து இருக்கிறார்.
அதாவது, ராமதாஸ் முகுந்தன் பரசுராமனை மாநில இளைஞர் அணி தலைவராக அறிவித்த போது அதற்கு மறுப்பு தெரிவித்து அன்புமணி கட்சியில் சேர்ந்து நான்கு மாதங்கள் தான் ஆகிறது, அனுபவம் உள்ளவர்களுக்கு முக்கியப் பொறுப்புகளை வழங்க வேண்டும் என விமர்சனம் செய்தார். அதற்கு, கோபமுற்ற ராமதாஸ் இந்த கட்சியை நான் தான் உருவாக்கியது, எனது கருத்து பிடிக்காதவர்கள் கட்சியை விட்டு விலகிக் கொள்ளலாம் என அதிரடியாக அறிவித்தார்.
அதன் பிறகு குறுக்கிட்டு பேசிய அன்புமணி சென்னை பனையூரில் புதிய கட்சி அலுவலகம் தொடங்கி இருப்பதாகவும் தன்னை தனியாக சந்திக்க வேண்டும் என்றால் அங்கு வந்து சந்திக்கலாம் என கூறினார். இதனால் பாமக கட்சி தொண்டர்கள் யார் பக்கம் செல்வது என தெரியாமல் கலக்கத்தில் இருக்கிறார்கள். சமீபத்தில் தான் பாமக கௌரவத் தலைவர் ஜி.கே மணி அவர்களின் மகன் தமிழ் குமரன் மாநில இளைஞர் அணி தலைவர் பதவியில் இருந்து விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.