சென்ற 2 வருடங்களாக நோய்த் தொற்று பரவல் அதிகரித்து வந்த நிலையில், பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் செயல்படாமலிருந்தனர். அதன் காரணமாக, பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வு நடைபெறாமலே தேர்ச்சி ஆனதாக அறிவிக்கப்பட்டது.
ஆனால் இந்த வருடம் நொத்தொற்று வெகுவாக குறைந்திருக்கின்ற சூழ்நிலையில், அனைவரும் நேரடி வகுப்புகளை சந்தித்து வருகிறார்கள். அதேபோல அனைவருக்கும் நேர்முகத்தேர்வு நடைபெற்று வருகிறது.
அந்த வகையில், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவிகளுக்கு, இந்த ஆண்டின் இறுதி தேர்வு முடிவடைந்த நிலையில் ,10, 11, 12, உள்ளிட்ட வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடைபெற்று வருகிறது.
இதில் 12ம் வகுப்பு மாணவர்களில் சில பாடப் பிரிவை சார்ந்த மாணவர்களுக்கு தேர்வு நிறைவு பெற்றுவிட்டதாக தெரிகிறது.
மற்ற மாணவர்களுக்கு வருகின்ற 28ம் தேதி உடன் தேர்வு முடிவடைகிறது. அதேபோல 11ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 31-ஆம் தேதியும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு வருகின்ற 30ஆம் தேதியும்,, தேர்வு முடிவடையவிருக்கிறது.
இதில் 12ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தம் செய்யும் பணிகள் அடுத்த மாதம் 2-ஆம் தேதி முதல் 8ஆம் தேதி வரை நடைபெறவிருப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது.
10ம் வகுப்பு மாணவர்களுக்கு அடுத்த மாதம் 1ம் தேதி ஆரம்பமாகும் என தெரிகிறது. இந்தநிலையில், 11ம் வகுப்பு மாணவர்களின் விடைத்தாள் திருத்தும் பணி அடுத்த மாதம் 10ம் தேதி ஆரம்பமாகி 17ஆம் தேதி வரையிலும் நடைபெறும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்திருக்கிறது.