தமிழ்நாட்டில் உதயமாகும் செம்மொழி பூங்கா! கோவை மக்களுக்கு இனிய செய்தி!!

Photo of author

By Jeevitha

தமிழ்நாட்டில் அமைந்துள்ள பெருநகரங்களில் கோவை ஒரு முக்கிய நகரமாகத் திகழ்ந்து வருகிறது. அதிகமான மக்கள் தொகையைக் கொண்டிருக்கும் இந்த கோயம்புத்தூர் நகரத்தில் விரைவில் ஒரு புதிய பூங்கா அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

சங்க காலத்தில் கோசர்புத்தூர் என அழைக்கப்பட்டு வந்த கோவையில் தற்போது 133 கோடி செலவில் புதிய செம்மொழிப் பூங்கா ஒன்று அறிமுகம் செய்யப்பட உள்ளது.

கோவையில் புதிய செம்மொழி பூங்கா அமைப்பதற்காக 120 ஏக்கர் பரப்பளவு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இரு கட்டங்களாக நடைபெற்று வரும் செம்மொழிப் பூங்கா அமைப்பதற்கான திட்டப் பணியில் 45 ஏக்கர் பரப்பளவில் முதற் கட்டத்திற்கான திட்டப்பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் கூடிய விரைவில் இத்திட்டப்பணிகள்  முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.இதற்காக 133 கோடி ரூபாய் நிதியானது ஒதுக்கப்பட்டது.

கோவையில் உதயாகும் இந்த புதிய செம்மொழி பூங்காவில் மல்டி லெவல் பார்க்கிங் பகுதி, ஓபன் ஏர் தியேட்டர், 1000 பேர் அமருவதுற்கு ஏதுவாக கன்வென்சன் சென்டர், வெளிப்புற உடற்பயிற்சி கூடம், அருங்காட்சியகம் போன்ற அனைத்தும் உருவாக்கப்படும் என்று விளக்கியுள்ளார்கள்.

மேலும் இணையதளத்தில் இத்தகைய பெரும்பாலான வசதிகளைக் கொண்டு உருவாகி வரும் இந்த செம்மொழி பூங்காவிற்கான மாதிரிப் புகைப்படங்கள் சமீபத்தில் பொதுமக்களிடையே பிரபலமாகிக் கொண்டு வருகிறது.

புதிதாக திறக்கப்படவுள்ள இந்த செம்மொழி பூங்காவில் நட்சத்திர வனம், மூலிகை வனம், மகரந்த வனம், செம்மொழி வனம் ஆகியவை உள்ளடக்கிய செம்மொழி பூங்கா இருபத்து மூன்று வகையான தோட்டங்களைக் கொண்டிருக்கும் என்று கூறியுள்ளனர். இதற்கான திட்டப்பணிகள் விரைவில் முடிவடைந்துவிடும் என்று கூறியுள்ளார்கள்.