சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்!

0
212
CM opens 75th Independence Day memorial in Chennai
CM opens 75th Independence Day memorial in Chennai

சென்னையில் 75 வது சுதந்திர தின நினைவு தூணை திறந்து வைத்த முதல்வர்!

இந்தியாவின் 75 வது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் இன்று சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. இந்த சுதந்திர தின விழாவில் 75 வருடங்கள் நிறைவடைந்ததை தொடர்ந்து சுதந்திர தின நினைவு தூண் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அண்மையில் தெரிவித்திருந்தார். அதனை தொடர்ந்து அதற்கான இடம் சென்னை காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் அருகே தேர்வு செய்யப்பட்டதை அடுத்து அதற்கான டெண்டர் விடப்பட்டது.

அந்த டெண்டரில் ரூ.1.94 கோடி நிதி இந்த துணுக்காக ஒதுக்கீடு செய்தது தமிழக அரசு. இதற்கான பணிகள் கடந்த 3 ஆம் தேதி முதல் தொடங்கியது. முதல்வரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித்துறை அதிகாரிகளின் கண்காணிப்பில், சுதந்திர தின நினைவு தூண் அமைக்கும் பணிகள் இரவு, பகலாக துரித முறையில், தொடர்ந்து நடைபெற்று வந்தன. இந்த நிலையில் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நினைவுத் தூணை இன்று திறந்து வைத்தார்.

அந்த நினைவு தூணில் 5 அடி உயரத்தில் நான்கு தலையுடன் கூடிய சிங்க முகங்களும், 8 அடி உயர அசோகச் சக்கரமும் பொருத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. அந்த தூணில் துப்பாக்கி ஏந்திய ராணுவ வீரர்களின் சிலைகளும் அமைக்கப்பட்டுள்ளது இந்த தூணின் சிறப்பாக இருக்கும் எனவும் கருதப்படுகிறது.

Previous articleசென்னைக்கு அழைத்து வரப்பட்ட மீரா மிதுன்! தொடங்கிய விசாரணை!
Next articleபோர் நினைவிடத்தில் ஜனாதிபதியின் மரியாதை! சுதந்திர தின விழாவின் ஒரு பகுதி!