கோவை கார் குண்டுவெடிப்பு சம்பவம்! தேசிய புலனாய்வு முகமையின் விசாரணைக்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவிக்கும் ஜவாஹிருல்லா காரணம் இதுதானா?

0
88

சமீபத்தில் கோவை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கிய சம்பவம் கோவையில் உக்கடம் பகுதியில் கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு சம்பவம்.

இந்த சம்பவம் எதற்காக நிகழ்த்தப்பட்டது, ஏன் நிகழ்ந்தது? என்று யோசிப்பதற்குள் பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று விட்டனர்.

அதாவது இந்த கார் வெடிப்பு சம்பவம் நடைபெற்ற போது அதில் அந்த காரில் இருந்த ஒரு நபர் உயிரிழந்தார். அந்த நபர் தேசிய புலனாய்வு முகமையால் விசாரிக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வந்தார் என்றும் சொல்லப்படுகிறது.

அதோடு அந்த நபர் ஐஏஎஸ் ஐ எஸ் தீவிரவாத அமைப்பால் இயக்கப்பட்டு இருக்கலாம் என்றும் சந்தேகிக்கப்படுகிறது இவர் மீது சந்தேகம் இருக்கிறது இவரை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் என்று புலனாய்வுத்துறை எச்சரிக்கை செய்தும் தமிழக அரசு அதனை கண்டு கொள்ளவில்லை என்று பாஜக குற்றம் சாட்டி வருகிறது.

இந்த நிலையில் தான் அந்த கோவில் முன்பு அந்த கார் வெடிப்பு சம்பவத்தை நிகழ்த்தி அதன் மூலமாக கோவையில் மிகப்பெரிய கலவரத்தை ஏற்படுத்த அந்த நபர் திட்டமிட்டார் என்றும் சொல்லப்படுகிறது மேலும் அவருடைய வீட்டில் அதிபயங்கர வெடிப்பொருட்கள், வெடி மருந்து உள்ளிட்ட பொருட்களை காவல்துறையினரும், தேசிய புலனாய்வு அமைப்பினரும் கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இந்த நிலையில் இது தொடர்பான விசாரணையை தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றி முதல்வர் ஸ்டாலின் பரிந்துரை செய்தார். அதற்கு காரணமாக தெரிவிக்கப்படுவது தமிழகம் மட்டுமல்லாமல் தமிழகம் கடந்தும் இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க வேண்டிய சூழ்நிலை இருப்பதால் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்படுவதாக விளக்கம் கொடுக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தான் கோவை மாநகர காவல்துறை ஆணையர் பாலகிருஷ்ணனை அவருடைய அலுவலகத்தில் ஜவாஹிருல்லா சந்தித்தார். அதன் பின்பு அவர் தெரிவித்ததாவது, கடந்த 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பால் கோவை மக்கள் பாதிக்கப்பட்டு மீண்டும் சகஜ நிலைக்கு திரும்ப பல வருடங்கள் தேவைப்பட்டது போல வேறு சம்பவங்கள் எதுவும் நடக்கக்கூடாது.

இந்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒற்றை நபரை இயக்கியது யார் இவ்வளவு பெரிய சம்பவத்தை நடத்துவதன் பின்னணி என்ன என்பது தொடர்பாக உண்மை வெளிக்கொண்டு வரவேண்டும் ஐ எஸ் ஐ எஸ் அமைப்பே இஸ்லாமிய சமூகத்தை சீர்தலுக்கக்கூடிய நோக்கத்தில் செயல்படக்கூடியது அதன் ஆதரவாளர்களாக இருப்பவர்கள் அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்தில் செயல்படுகிறார்கள் என்று தெரிவித்திருக்கிறார்.

இது போன்ற மனநிலையில் இருப்பவர்களுக்கு உளவியல் ரீதியான கவுன்சிலிங் வழங்க காவல்துறை தயாராக இருக்கிறது காவல்துறை சிறப்பாக செயல்பட்டு வருகிறது கார் வெடிப்பு சம்பவத்தை தேசிய புலனாய்வு முகமை எவ்வாறு விசாரிக்க போகிறது என்பது கேள்விக்குறியாக தான் இருக்கிறது தமிழக காவல்துறையினரை விசாரிக்க வேண்டும் என்று அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் இந்த வழக்கை பொறுத்தவரையில் தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரிப்பது தான் சரியாக இருக்கும் என்று பலர் தெரிவித்து வருகிறார்கள்.

தேசிய புலனாய் முகாமை விசாரிக்காமல் இந்த வழக்கை தமிழக காவல்துறையினர் விசாரித்தால் இந்த வழக்கிற்கான உண்மையான காரணம் என்னவென்று தெரியாமல் போவதற்கான வாய்ப்பு உள்ளது. அதோடு இந்த கார் வெடிப்பு சம்பவத்தையே ஒட்டுமொத்தமாக திசை திருப்பும் வாய்ப்பும் இருக்கிறது.

ஆனால் ஜவாஹிருல்லா இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிப்பதற்கு மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்து இருப்பதற்கான காரணம் என்னவென்றால் ஒருவேளை தேசிய புலனாய்வு முகமை இந்த வழக்கை விசாரித்தால் தன்னுடைய சமூகத்தின் மீது பழி வந்துவிடுமோ என்று அஞ்சுகிறார் எனவே தோன்றுகிறது.

ஐ எஸ் தீவிரவாத அமைப்பு அமைப்புதான் என்பது அனைவருமே அறிந்தது தான். அந்த விதத்தில் ஐஎஸ் தீவிரவாத அமைப்பால்தான் இந்த கார் வெடிப்பு சம்பவம் நிகழ்த்தப்பட்டது என்ற விதத்தில் இந்த வழக்கற்கான உண்மை தன்மை இருந்தால் அதன் மூலமாக இஸ்லாமிய சமூகத்திற்கு ஒரு களங்கம் வந்து விடுமோ என்று அவர் அஞ்சுகிறார்.

அதற்காகத்தான் இந்த வழக்கை தேசிய புலனாய்வு முகமை விசாரிக்காமல் மாநில காவல் துறையினரை விசாரிக்க வேண்டும் என்று அவர் நினைக்கிறார் எனவும் பலர் தெரிவித்து வருகிறார்கள்.