12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்! கோவை மாவட்டத்தில் காத்திருக்கும் வேலை வாய்ப்பு!

கோவை மாவட்ட குழந்தைகள் நல குழுமத்தில் காலியாக இருக்கின்ற உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்தை தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

முக்கிய நாட்கள்

விண்ணப்பம் ஆரம்பமாகும் தேதி: 20- 10- 2022

விண்ணப்பம் முடிவடையும் தேதி: 10-11-2022

விவரங்கள்: உதவியாளருடன் இணைந்த கணினி இயக்குபவர் பணியிடத்திற்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அரசு அங்கீகாரம் பெற்ற நிறுவனத்தில் கணினி கல்வியியல் பட்டய படிப்பு முடித்திருக்க வேண்டும் கணினி இயக்குவதில் சிறந்த அனுபவம் பெற்று இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் 10-11- 2022 அன்று 40 வயதிற்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

தகுதியான நபர்கள் பாஸ்போர்ட் சைஸ் புகைப்படத்துடன் வரும் 10 11 2022 அன்று மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் விண்ணப்பங்களை Coimbatore. nic.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி: மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் 2வது தளம் பழைய கட்டிடம் மாவட்ட ஆட்சியர் வளாகம் கோவை-641018

Leave a Comment