கோவையில் சரியும் அதிமுக கோட்டை.. தவெக பக்கம் சாய்ந்த முக்கிய புள்ளி.. திணறும் இபிஎஸ்..

ADMK TVK: அடுத்த சில மாதங்களில் தமிழகத்தில் சட்டசபை தேர்தல் நடக்க இருக்கிறது. இதற்கான பணிகளில் தமிழக அரசியல் களம் முனைப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த சமயத்தில் அரசியல் அரங்கை அதிர வைக்கும் வகையில், பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வருகின்றன. அதில் முதலிடம் பிடிப்பது விஜய்யின் அரசியல் வருகை என்றாலும், தற்போது அனைத்து ஊடகங்களிலும் தலைப்பு செய்தியாக இருப்பது அதிமுகவில் ஏற்பட்டுள்ள பிரிவினைகள் தான்.

அந்த வகையில் சசிகலா, ஓபிஎஸ், தினகரன், செங்கோட்டையன் போன்ற முக்கிய தலைகள் அதிமுகவிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் அக்கட்சி பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகிறது. செங்கோட்டையன் தவெகவில் இணைந்த நிலையில் மற்ற மூவரின் கூட்டணி முடிவு என்னவென்றே தெரியவில்லை. இவர்களின் பிரிவு அதிமுகவின் வாக்கு வங்கியில் மாற்றத்தை ஏற்படுத்தம் என்று கணிக்கப்படுகிறது. இதனை தொடர்ந்து தனக்கு எதிராக யார் குரல் எழுப்பினாலும் சற்றும் யோசிக்காமல் அவர்களை கட்சியிலிருந்து நீக்குவதை இபிஎஸ் வழக்கமாக வைத்திருக்கிறார்.

இந்நிலையில் கோவையில் அதிமுகவின் சமூகவலைதள பிரிவில் முக்கிய பொறுப்பிலிருந்த தொழிலதிபர் KPR சதிஸ் இன்று அதிமுகவிலிருந்து விலகி, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்துள்ளார். கோவை முழுவதும் அதிமுக கட்டுபாட்டில் இருக்கம் நிலையில், கோவையின் முக்கிய முகமாக அறியப்பட்ட நபர் தவெகவில் சேர்ந்திருப்பது கோவையில் அதிமுகவின் செல்வாக்கு குறைந்து வருவதை காட்டுகிறது. இதனால் கோவை கூடிய விரைவில் தவெக பக்கம் செல்லும் வாய்ப்புகள் உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது.