100 கோடி ரூபாயை நெருங்கும் வசூல்… சாதனை படைப்பாரா மாவீரன்!!

Photo of author

By Sakthi

100 கோடி ரூபாயை நெருங்கும் வசூல்… சாதனை படைப்பாரா மாவீரன்!!

Sakthi

100 கோடி ரூபாயை நெருங்கும் வசூல்… சாதனை படைப்பாரா மாவீரன்!!
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த வாரம் வெளியான மாவீரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூலை நெருங்கி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வெளியான மாவீரன் திரைப்படத்தை இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கியுள்ளார். மாவீரன் திரைப்படத்தில் அதிதி சங்கர், யோகி பாபு, சரிதா, இயக்குநர் மிஷ்கின், தெலுங்கு நடிகர் சுனில் மற்றும் பலர் நடித்துள்ளனர். நடிகர் விஜய் சேதுபதி அவர்கள் இந்த படத்தில் பின்னணி பேசியுள்ளார்.
இந்நிலையில் மாவீரன் திரைப்படம் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. வசூல் ரீதியாக சாதனை படைக்குமா என கேள்வி எழுந்துள்ள நிலையில் இதுவரை மாவீரன் திரைப்படம் 69 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ் வசூலில் இதுவரை 69 கோடி ரூபாய் வசூல் செய்த மாவீரன் திரைப்படம் தமிழகத்தில் மட்டுமே கிட்டத்தட்ட 40 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளது. இந்த தகவலை வைத்து பார்க்கும் பொழுது மாவீரன் திரைப்படம் விரைவில் 100 கோடி ரூபாயை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் திரைத்துறை மத்தியில் மாவீரன் திரைப்படம் 80 கோடா ரூபாய் முதல் 90 கோடி ரூபாய் வரை மட்டுமே வசூல் செய்யும் என்று பேசப்படுகின்றது. இதற்கு மத்தியில் மாவீரன் திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்யுமா இல்லையா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.