சன்னி லியோனுடன் படத்தில் இணைந்த காமெடியன்! புகைபடங்கள் வெளியிட்டு மகிழ்ச்சி!

0
96
Comedian joins Sunny Leone in the film! Glad to publish the photos!
Comedian joins Sunny Leone in the film! Glad to publish the photos!

சன்னி லியோனுடன் படத்தில் இணைந்த காமெடியன்! புகைபடங்கள் வெளியிட்டு மகிழ்ச்சி!

சன்னி லியோன் என்ற நடிகையை பற்றி தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். அந்த அளவுக்கு அவர் வீடியோக்களில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். அவர் பல ஆண்களின் கனவுக்கன்னியாக இருந்து வருகிறார். அவரை பார்க்காமல் பலர் ஏங்குவார்கள் என்றும் சொல்லி உள்ளனர். அவரை யாராலும் மறுக்க முடியாது.

அந்த அளவிற்கு அவர் பிரபலமான நடிகை ஆவார். தற்போது தமிழ் படங்களில் நடித்து வரும் அவர் வடகறி படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார். இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் என அனைத்து மொழி படங்களிலும் நடித்துள்ளார். ஏற்கனவே சன்னி லியோன் படங்களில் நடிக்க எதிர்ப்புகள் கிளம்பின.

வட இந்தியாவில் சன்னி லியோனின் ஆபாச சுவரொட்டிகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீசிலும் புகார் தெரிவித்தனர். அதேபோல பெங்களூருவில் ஒரு புத்தாண்டு நிகழ்ச்சி  ஒன்றில் நடனமாட எதிர்ப்பு தெரிவித்து அவரது ஆபாச புகைப்படங்களை எரித்து கன்னட அமைப்பினர் போராட்டங்களை கையில் எடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது சன்னி லியோன் தமிழில் ஓ மை கோஸ்ட் என்ற திகில் படத்தில் நடித்து வருகிறார். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் காமெடி நடிகர் சதீஷும் நடிக்கிறார் என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள். தற்போது படப்பிடிப்பு தளத்தில் சன்னி லியோனுடன் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படங்களை சதீஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

மேலும் அவரைப் பற்றி புகழ்ந்து பல புனைபெயர்கள் வைத்துள்ளார். அவர் மிகவும் இனிமையானவர். சிறந்த நடிகை, அற்புதமானவர், மனித நேயம் மிக்கவர், அவருடன் நடிப்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் பல்வேறு விமர்சனங்களையும் பதிவிட்டுள்ளார்.