வாஸ்து பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத கருத்துகள்..!! அனல் பறக்கும் வாஸ்து நிபுணரின் பேச்சு..!!

Photo of author

By Janani

வாஸ்து பிரச்சனைக்கு இதுவரை யாரும் சொல்லாத கருத்துகள்..!! அனல் பறக்கும் வாஸ்து நிபுணரின் பேச்சு..!!

Janani

புதியதாக ஒரு வீட்டினை கட்டுகிறோம் என்றால் கண்டிப்பாக அதற்கு வாஸ்து பார்த்து தான் கட்ட வேண்டும் என்று அனைவரும் கூறுவர். நமது வீட்டில் பீரோவை வாஸ்து பார்த்து வைப்பதும், மணி பிளான்ட் வளர்ப்பதும், ஆமை பொம்மை வாங்கி வைப்பதும் வாஸ்து பிரச்சனைகளை சரி செய்து விடும் என்று கூறுவர். ஆனால் பலவிதமான பொருட்களை வாங்கி வைப்பது வாஸ்து பிரச்சனைகளை சரி செய்யாது.

அதேபோன்று உத்திரபிரதேசத்தில் நடைபெற்ற கும்பமேளாவில் 50 கோடி மக்களுக்கு மேல் வந்து நீராடி சென்றுள்ளனர் என்று கூறியுள்ளனர். இவ்வளவு மக்கள் வந்தாலும் அந்த இடமானது அசுத்தம் ஆகாமல் சுத்தமாக தான் இருக்கிறது அதற்கு காரணம் வாஸ்து தான். வாஸ்து சரியாக அமைந்தால் எந்த ஒரு பிரச்சனைகளும் ஏற்படாது.

ராமேஸ்வரம் சென்றால் அங்கு நீரில் குளித்துவிட்டு, துணிகளை விட்டு வருவோம். அதனால் அந்த இடம் அசுத்தமாக மாறி இருக்கும். அதற்கு காரணமும் வாஸ்து தான். அதேபோன்றுதான் பெரும்பாலும் 100 இல் 70% மக்கள் பீரோவை தென்மேற்கு திசையில் தான் வாஸ்து நன்றாக இருக்கும் என்று வைத்திருப்பர். ஆனால் அந்த பீரோவில் பணம் இருக்குமா என்று கேட்டால் அது சந்தேகம்தான்.

ஒருவர் எப்பொழுதும் தண்ணீர் குடிக்கும் பொழுது கையில் எடுத்து மேலே தூக்கி தான் குடிப்பார் என்றால், அவர் ஒருநாள் ஒரு ஹோட்டலுக்குச் சென்று உணவு அருந்தும் பொழுது திடீரென தண்ணியை சிப் செய்து குடித்து விடுகிறார். இதற்கு காரணம் அந்த இடத்திற்கு ஏற்ப வாஸ்துவானது நம்மை மாற்றி விடும் என்பதுதான்.

நாம் ஒரு இடத்தில் அமர்ந்து இருக்கும் பொழுது அந்த இடத்தில் இருக்க கூடிய வாஸ்துவானது, நமது எண்ணங்களை திசை திருப்பி நமது செயல்களை மாற்றி விடும். இதுதான் வாஸ்து என்று வாஸ்து நிபுணர் கூறுகிறார்.

புதியதாக ஒரு வீடு வாங்குகிறோம் அல்லது கட்டுகிறோம் என்றால் கண்டிப்பாக நாம் வாஸ்து பார்த்து தான் கட்டுவோம். அந்த வீட்டில் வசிக்கக் கூடியவர் நீண்ட ஆயுளையும், ஆரோக்கியமான உடலையும் கொண்டிருக்கிறார் என்றால் அவரிடம் செல்வ வளம் இருக்காது. அதே போன்று தான் ஒருவரிடம் பொருளாதார வசதி நன்றாக உள்ளது என்றால், அவரது உடல் ஆரோக்கியத்தில் குறைபாடு, நோய்வாய் படுவது இது போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இதுதான் வாஸ்து.

ஒருவர் வீடு கட்டுவதற்காக சரியில்லாத இடத்தை வாங்கிவிட்டு, அதில் சரியான வீட்டினை கட்டினாலும் கூட அந்த நிலமானது தீய எண்ணங்களை உருவாக்கிக் கொண்டே இருக்கும். எனவே வாஸ்து என்பதற்கு இடம்தான் முக்கியமான ஒன்று. இடத்திற்கு ஏற்ப தான் வாஸ்து என்பது செயல்படும்.

எனவே வீடு கட்டுவதற்காக நிலம் வாங்குவதற்கு முன்பாகவும், வீடு கட்டுவதற்கு முன்பாகவும் வாஸ்து நிபுணரை பார்த்து சரியான நிலம் மற்றும் வீட்டினை கட்டினால் மட்டுமே வாஸ்து என்பது சரியாக அமையும். வீட்டில் பீரோவை வைப்பதற்கு என வாஸ்து பார்ப்பதை விட அந்தக் குடும்பத்தில் உள்ளவருக்கு சரியான தொழில் அமைய வேண்டும் மா
அந்தத் தொழிலை அமைத்துக் கொடுப்பவர் ஈசானியர். எனவே ஈசானியர் சரியாக இருந்தால் மட்டுமே அந்த வீட்டில் உள்ள பீரோவில் பணம் வந்து சேரும். எனவே அதற்கான தீர்வைதான் காண வேண்டுமே தவிர பீரோவை மாற்றி மாற்றி வேறு இடத்தில் வைக்க கூடாது.

ஒரு பொருளை இந்த இடத்தில் அல்லது இந்த மூலையில் வைத்தால் வாஸ்து சரியாகிவிடும், இந்தச் செடிகளை வீட்டில் வளர்த்தால் வாஸ்து பிரச்சனை சரியாகிவிடும்,இந்த பரிகாரத்தை செய்தால் வாஸ்து சரியாகிவிடும் என்று கூற முடியாது. எனவே வீடு கட்டுவதற்கு முன்பாகவும், நிலம் வாங்குவதற்கு முன்பாகவும் சரியான வாஸ்து நிபுணர்களிடம் ஆலோசித்து அதன் பின்னரே செயல்பட வேண்டும்.