வணிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை! ஆனால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி காரணம் இதுதான்!

Photo of author

By Sakthi

வணிகர்களுக்கு ஷாக் கொடுத்த சிலிண்டர் விலை! ஆனால் இல்லத்தரசிகள் பெரும் மகிழ்ச்சி காரணம் இதுதான்!

Sakthi

சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாடு சிலிண்டர் விலையை மத்திய எண்ணெய் நிறுவனங்கள் மாதம்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தினடிப்படையில் கேஸ் சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் புதிய விலையை நிர்ணயம் செய்து அறிவிக்கின்றன.

இந்த சூழ்நிலையில், இந்த மாதத்திற்கான விலை நிர்ணயம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது. இதில் வணிக ரீதியாக பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை 268.50 உயர்த்தப்பட்டது.

19 கிலோ எடை கொண்ட வணிகப் பயன்பாடுள்ள இந்த எரிவாயு சிலிண்டரின் விலை 2,406 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது இன்று முதல் அமலுக்கு வந்திருக்கிறது.

ஆனாலும் கூட வீட்டு உபயோக எரிவாயு சிலிண்டர் விலையில் எந்தவிதமான மாற்றமும் ஏற்படவில்லை. 965.50 பைசாவுக்கு விற்பனை செய்யப்படுகிறது அதேபோல பெட்ரோல் மற்றும் டீசல் விலையிலும் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை.