இந்திய கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது பாலியல் புகார்! வழக்கு ஒத்திவைப்பு
இந்திய கிரிக்கெட் அணி வீரர் பிரித்விஷா அவர்களின் மீது பிரபல நடிகை கொடுத்த பாலியல் புகார் குறித்த வழக்கை ஜூன் 28ம் தேதிக்கு தள்ளி வைக்கப்படுவதாக நீதின்றம் அறிவித்துள்ளது.
19 வயதுக்குட்பட்டோரின் இந்திய அணியின் கேப்டனாக இருந்து இந்திய அணிக்கு உலகக் கோப்பையை வென்று கொடுத்த வீரர் பிரித்வி ஷா படிப்படியாக தனது முயற்சியால் இந்திய டெஸ்ட் அணி, ஒரு நாள் போட்டிக்கான இந்திய அணி, டி20 போட்டிக்கான இந்திய அணியில் அடுத்தடுத்து இடம் பிடித்தார். இந்தியன் பிரீமியர் லீக் என்று சொல்லப்படும் ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரில் டெல்லி அணிக்காக இவர் விளையாடி வருகிறார். மேலும் உள்ளூர் தொடர்களிலும் விளையாடி வருகிறார். இந்த நிலையில் இந்திய வீரர் பிரித்விஷா அவர்கள் மீது பிரபல நடிகை ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார்.
போஜ்புரியில் பிரபல நடிகையாக இருப்பவர் நடிகை ஸ்வப்னா கில். இவர் பிரித்விஷா அவர்கள் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்ததாக போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து காவல் துறையும் விசாரனை மேற்கொண்டது.
இந்நிலையில் நடிகை ஸ்வப்னா கில் கொடுத்த புகார் பொய் என்று காவல் துறை நீதிமன்றத்தில் உறுதிபடுத்தியுள்ளது. சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரித்த காவல் துறையினர் கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா மீது குற்றம் இல்லை என்று நீதிமன்றத்தில் கூறியுள்ளது.
காவல் துறையினர் நீதிமன்றத்தில் “சிசிடிவியை பார்த்த பொழுது நடிகை ஸ்வப்னா கில் அவர்கள்தான் பிரித்வி ஷா அவர்களை தாக்கியுள்ளார். மேலும் பிரித்வி ஷா அவர்கள் நடிகை ஸ்வப்னா கில்லுக்கு எந்தவொரு பாலியல் தொல்லையும் கொடுக்கவில்லை. பாலியல் தொல்லை கொடுத்தது போலவும் சிசிடிவி காட்சியில் இல்லை” என்று தெரிவித்தது.
இந்நிலையில் போஜ்புரி நடிகை ஸ்வப்னா கில் கொடுத்த புகார் பொய் என்று தெரிவந்தது. இதையடுத்து இந்த வழக்கு ஜூன் 28ம் தேதிக்கு அதாவது நாளை ஒத்தி வைக்கப்படுவதாக நீதிமன்றம் அறிவித்துள்ளது.