இன்று முதல் இது கட்டாயம்! சென்னை மாநகராட்சி அதிரடி உத்தரவு!

Photo of author

By Sakthi

தமிழகத்தில் நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது இதன் காரணமாக, தமிழக அரசு முக கவசம் அணிவது, சமூக இடைவேளையை பின்பற்றுவது, உள்ளிட்ட நெறிமுறைகளை கட்டாயமாக்கியிருக்கிறது.

முக கவசம் அணியாமல் வெளியில் செல்பவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருக்கிறது. ஆனாலும் சென்னை நகர மக்கள் கவசம் அணியாமல் சென்று வருகிறார்கள்.

இதன் காரணமாக, சென்னை மக்கள் கட்டாயமாக மொக்க கவசம் அணிய வேண்டும் என்று மாநகராட்சியின் சார்பாக அறிவுறுத்தப்பட்டிருக்கிறது. மிக கவசம் அணியாமல் சென்றால் அபராதம் விதிக்கும் நடைமுறையை தீவிரப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் தலைநகர் சென்னையில் மக்கள் அதிகமாக கூடும் இடங்களில் முகக்கவசமணியாவிட்டால் இன்று முதல் 500 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்று மாநகராட்சி உத்தரவிட்டிருக்கிறது.

வணிகவளாகங்கள் திரையரங்குகள் சந்தைகள் உள்ளிட்ட பகுதிகளில் முக கவசம் அணியாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதோடு அங்கன்வாடிகளில் சமூக இடைவெளியை பின்பற்றி பொதுமக்களை அனுமதிக்க வேண்டும், வணிக நிறுவனங்களில் ஊழியர்கள் நிச்சயமாக கவசம் அணிந்திருக்க வேண்டும், என்று சென்னை மாநகராட்சி கூறியிருக்கிறது.