அகில இந்திய வானொலிக்கு கண்டனம்!! மத்திய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம்!!

Photo of author

By Sakthi

அகில இந்திய வானொலிக்கு கண்டனம்!! மத்திய அமைச்சருக்கு திமுக அரசு கடிதம்!!

அகில இந்திய வானொலி சொல்லுக்கு பதிலாக இந்தியில் வேறு பெயர் வைத்து குறிப்பிடுவதை கண்டித்து திமுக அரசு மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

அதாவது அகில இந்திய வானொலி என்ற பெயரை வைத்து குறிப்பிடுவதற்கு பதிலாக ஆகாஷ்வாணி என்று ஹிந்தியில் அகில இந்திய வானொலியை அழைத்துக் கொண்டிருக்கின்றனர்.

ஆகாஷ் வாணி என்று இந்தியில் குறிப்பிடுவதை ஆளும் திமுக கட்சி கண்டனம் தெரிவித்து மத்திய அமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளது.

முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் சார்பில் நாடாளுமன்றக் குழுத் தலைவர் TR பாலு அவர்கள் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அவர் எழுதியுள்ள அந்த கடிதத்தில் “ஆங்கில மொழியிளும் மாநிலங்களின் மொழியிளும் அகில இந்திய வானொலியை அழைத்துக் கொண்டு வருகிறோம். இதை மாற்றி ஆகாஷ் வாணி என்று இந்தியில் அழைக்கின்றனர்.

இந்த ஆகாஷ் வாணி என்ற இந்தி பெயருக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்கிறோம். மேலும் அகில இந்திய வானொலி என்ற பெயரை மாற்றி ஆகாஷ் வாணி என்று இந்தியில் கூற வைக்கும் பிரசார் பாரதி அவர்களின் முடிவு கண்டிக்கத்தக்கது. இதை ஏற்க முடியாது” என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.