காலில் கருப்பு கயிறு கட்டும் நபரா நீங்கள்.. இதை தெரிஞ்சிக்காம கட்டாதீங்க..!

Photo of author

By Priya

Black Thread Benefits: நம்மில் பலரும் காலில் கருப்பு கயிறு அணிந்திருப்பதை நாம் பார்த்திருப்போம். ஏன் இந்த கருப்பு கயிறு கட்டுகிறோம், எதற்காக கட்டுகிறோம், எந்த ராசிகாரர்கள் கருப்பு கயிறை அணியலாம். யார் கருப்பு கயிறை அணியக் கூடாது போன்ற எதும் தெரியாமல் ஒரு சில நபர்கள் கட்டியிருப்பார்கள். அவர்கள் கண் திருஷ்டி கழிப்பதற்காக கூட இந்த கருப்பு கயிறை அணிந்திருக்கலாம். ஆனால் கருப்பு கயிறு எந்த ராசிகாரர்கள் அணிய வேண்டும் என்ற சில நிபந்தனைகள் உள்ளன. அதன்படி கருப்பு கயிறு கட்டினால் தான் அவர்களுக்கு நன்மை பயக்கும்.

தற்போது காலில் கருப்பு கயிறு கட்டுவது இயல்பான ஒன்றாக இருந்தாலும், நமது ஜோதிட சாஸ்திரங்களை பின்பற்றி கயிறை அணிந்துக்கொண்டால் நன்மை பயக்கும். அதன் படி கருப்பு கயிறை அணிந்துக்கொள்வதற்கென்றே சில நிபந்தனைகள் உள்ளன. நாம் இந்த பதிவில் கருப்பு கயிறு அணிந்துக்கொள்வதற்கான நிபந்தனைகள் மற்றும் யார் யார் கட்டிக்கொள்ளலாம் என்று Black Thread Benefits in Tamil பார்க்கலாம்.

எந்த ராசிக்காரர்கள் கருப்பு கயிறு அணியக்கூடாது

கருப்பு கயிறை மேஷம் மற்றும் விருச்சிக ராசிக்காரர்கள் கட்டாயம் அணியக்கூடாது. இவர்களின் ராசி அதிபதி செவ்வாய். செவ்வாய் கிரகத்தால் ஆளப்படுபவர்கள் கட்டாயம் கருப்பு நிற கயிறை அணியக்கூடாது. இதனால் இவர்களுக்கு மனக்குழப்பம் அதிகரிக்கும். மனது ஒருநிலையில் இருக்காது. மேலும் உடல் சார்ந்த நோய்கள் அதிகம் ஏற்படும். இவர்கள் கருப்பு கயிறு மட்டுமல்லாமல், கருப்பு நிற உடைகளை தவிர்ப்பது நல்லது.

கருப்பு கயிறு அணிந்துக்கொள்ளும் முறைகள்

கருப்பு கயிறு அணிந்துக்கொள்வதற்கு முன்பு நீங்கள் வேறு ஏதாவது கயிறு அணிந்திருந்தால், அதாவது மஞ்சள் அல்லது சிவப்பு நிறங்களில் கயிறு அணிந்திருந்தால் அதனை முதலில் கழட்டி விட வேண்டும். ஒரே சமயத்தில் இரு வேறு கயிறுகளை அணிந்துக்கொள்வதை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக கருப்பு கயிறு கட்டும் முன் நல்ல நேரம் பார்த்து கட்டினால் நல்லது. பிரம்ம முகூர்த்த நேரத்தில் கருப்பு கயிறு கட்டுவது கூடுதல் வலிமையை கொடுக்கும் என்பதால் இந்த கால இடைவெளியில் கருப்பு கயிறு அணிந்துக்கொள்ளலாம்.

மேலும் கருப்பு கயிறு கட்டுவதற்கு முன்பு ருத்ர காயத்ரி மந்திரத்தை கூறிவிட்டு கயிறு கட்டுவது கூடுதல் சிறப்பை கொடுக்கும். மேலும் இந்த மந்திரத்தை கூறிவிட்டு கயிறு கட்டினால் வலிமை பெருகும்.

மேலும் படிக்க: சித்திரை மாதம் குழந்தை பிறந்தால்.. அந்த பெற்றோர்கள் அதிர்ஷ்டசாலி தான்..!