மாற்றத்தை விரும்பும் மக்கள் மாநாடு.. களத்தில் இறங்கிய சீமான்!!

0
107
Conference of people who want change.. Seeman who entered the field!!
Conference of people who want change.. Seeman who entered the field!!

NTK: நாம் தமிழர் கட்சி ஆரம்பிக்கப்படத்திலிருந்தே தனித்து நின்று தான் களம் காண்கிறது. சட்டமன்ற தேர்தல் மட்டுமல்லாது நாடாளுமன்ற தேர்தலிலும் தனித்து போட்டியிடுவோம் என்று நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் கூறியிருந்தார். முன்பெல்லாம் சட்டமன்ற  தேர்தலில் வெறும் 8% வாக்குகளை மட்டுமே பதிவு செய்த வந்த நாதக, 2026 சட்டமன்ற  தேர்தலில் 38% வாக்குகளை வாக்குகளை பதிவு செய்யும் என்று சீமான் உறுதி பட கூறியிருக்கிறார்.

மேலும் இந்த தேர்தலில் அதிமுக, திமுக, நாதக, தவெக போன்ற கட்சிகளிடையே நான்கு முனை போட்டி நிலவும் என்பதும் உறுதியாகியுள்ளது. இதனை அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தேர்தலில் மக்களின் வாக்கை குவிக்க வேண்டுமென்று  அயராது  உழைத்து வரும் சீமான் தற்போது, வருகிற 7ஆம் தேதி திருச்சியில் மாற்றத்தை  விரும்பும் மக்கள் மாநாட்டை நடத்த போவதாக அறிவித்துள்ளார்.

இது வரை பல்வேறு  மாநாடுகளை  நடித்திய சீமான் தற்போது இந்த மாநாட்டை அறிவித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. திமுக தான் தனது பிரதான அரசியல் எதிரி என்று கூறி வரும் நாதக அனைத்து இடங்களிலும், செய்தியாளர்களிடமும் திமுகவை சரமாரியாக வஞ்சித்து வருகிறது. இந்நிலையில் இவர் நடத்த போகும்  இந்த மாநாட்டில் எந்த மாதிரியான சூளுரைகள் மற்றும் திமுகவிற்கு எதிரான பேச்சுக்கள் இடம் பெறும் என்பது தெரியவில்லை.  இதற்கு முன் தவெக தலைவர் விஜய்யும் திராவிட கட்சிகளுக்கு மாற்று என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. 

Previous articleஅதிமுக ஆட்சியில் முறைகேடு.. சிக்கிய அதிமுக அமைச்சர்.. விசாரணையை தொடங்கிய லஞ்ச ஒழிப்பு துறை!!
Next articleபொய்யை உண்மை போலவே எதிர்க்​கட்​சித் தலை​வர் கூறுகிறார்.. திமுக அமைச்சர் சரமாரி தாக்குதல்!!