விவசாயிகளுக்கும் பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல் வாகனங்கள் உடைப்பு

0
93
Conflict between farmers and BJP volunteers! Vehicles breakdown!
Conflict between farmers and BJP volunteers! Vehicles breakdown!

விவசாயிகளுக்கும், பாரதிய ஜனதா தொண்டர்களுக்கும் இடையில் மோதல்! வாகனங்கள் உடைப்பு!

மத்திய அரசு செயல்படுத்தும் திட்டங்கள் பெரும்பாலும் அடித்தட்டு மக்களுக்கு பயன்படாத வகையிலேயே இருக்கிறது. இது நமக்கு வேதனை அளித்தாலும் இதுவே உண்மை. மத்திய அரசு எப்போதும் பெரும் தொழிலதிபர்களுக்கு உதவி புரியும் வகையிலேயே இருக்கும். கடந்த வருடங்களில் தமிழக விவசாயிகள் பலர் தலைநகரில் எவ்வளவோ போராட்டங்களை மேற்கொண்டும் பிரதமர் மோடிஜி அவர்களை திரும்பி கூட பார்க்காத முடியாத அளவுக்கு அதிக அளவு வேளை பளுவில் இருந்தார்.

அவர்களை தொடர்ந்து தற்போது பஞ்சாப் விவசாயிகள், மத்திய அரசு கொண்டு வந்த வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி டெல்லியில் கடந்த ஏழு மாதங்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். தற்போது கூட அதை என்னவென்றும் கேட்காத பிரதமர் மோடி அவர்கள் முக்கிய வேலையில் மூழ்கி உள்ளார். ஆனாலும் விவசாயிகள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மிகுந்த மனதிடத்துடன் அங்கேயே முகாமிட்டு தங்கி சமைத்து, சாப்பிட்டு வருகின்றனர்.

விவசாயிகள் டெல்லியில் உள்ள சிங்கு, திக்ரி ஆகிய இடங்களிலும், டெல்லி-உத்தரபிரதேச எல்லையில் உள்ள காசிப்பூரிலும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதற்கிடையே உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த அமித் வால்மீகி என்ற பிரமுகருக்கு வரவேற்பு அளிக்க நேற்று காசிப்பூர் எல்லையில் பாரதிய ஜனதா தொண்டர்கள் நிறைய பேர் குவிந்தவண்ணம் இருந்தனர்.

அவர்கள் ஏராளமான வாகனங்களில் வந்து இருந்ததால் அந்த இடம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டது. பின்னர் டெல்லி மீரட் விரைவு சாலையில் பா.ஜா.கா வினர் பேரணியாக சென்றனர். அப்போது அதே சாலையில் முகாமிட்டு போராட்டம் நடத்தி வந்த விவசாயிகள் சங்கத்தினருக்கும், அவர்களுக்கும் போராட்டம் வெடித்தது. அந்த இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் முற்றிய நிலையில் கைகலப்பாக மாறியது.

பின்னர் இரு தரப்பினரும் போராட்டத்தின் காரணமாக அடிதடியில் இறங்கினர். கம்புகளால் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இதில் பல பேர் காயமடைந்தனர். பாரதிய ஜனதா ஊர்வலத்தில் பங்கேற்ற வாகனங்கள் அனைத்தும் அடித்து நொறுக்கப்பட்டன. இந்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி மிகவும் வைரலாக பரப்பப்பட்டது. ஆனால் இது அரசின் சதியை காட்டுவதாக 40 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா குற்றம்சாட்டியுள்ளது.

மேலும் அதன் செய்தித்தொடர்பாளர் ஜக்தர்சிங் பஜ்வா கூறியது பாரதிய ஜனதாவின் அரசு ரகளையில் ஈடுபட்டதால் அவர்களை அப்புறப்படுத்தும்படி மாவட்ட கலெக்டர்கள் இடமும், அரசு அதிகாரிகளிடமும் விவசாயிகள் முறையிட்டனர். ஆனால் அதிகாரிகள் அவர்களை என்னவென்று கூட கேட்கவில்லை. விவசாயிகளை பாரதிய ஜனதா தொண்டர்கள் வம்புக்கு இழுத்தனர். மேலும் தங்களது வாகனங்களை அவர்களே அடித்து உடைத்து விட்டு விவசாயிகளின் மேல் தற்போது பழி போடுகின்றனர்.

இதைப் பார்க்கும்போது விவசாயிகளின் போராட்டத்தை நசுக்க அரசு சதி செய்வதாக தெரிகிறது, என்ற சந்தேகம் எங்களுக்கு ஏற்படுகின்றது. இதுபோன்ற தந்திரங்கள் கடந்த காலத்திலும் கடைப்பிடிக்கப்பட்டன. ஆனால் அரசின் சதி எப்போதும் வெற்றி பெறப்போவதில்லை. இதுகுறித்து போலீசார் உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி நாங்கள் பேசி முடிவு எடுக்க உள்ளோம் என்றும் கூறினார்.