தலீபான்களுக்குள் மோதல்! புதிய ஆட்சி அமைப்பதில் தகராறு! தலைவர் காயம்!
ஆப்கானை தற்போது தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். கடந்த மாதம் 15ஆம் தேதி முதல் ஒட்டுமொத்த ஆப்கானிஸ்தானையும் கைப்பற்றினர். இதைத்தொடர்ந்து ஆப்கன் அதிபர் அஸ்ரப் கனி நாட்டை விட்டு தப்பி ஓடினார். இதன் காரணமாக ஆட்சி அதிகாரம் தங்கள் வசம் வந்ததாக தலிபான்கள் அதிகாரபூர்வமாக அறிவித்தனர். அதன் காரணமாக புதிய அரசு விரைவில் அமைக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தனர்.
இந்த புதிய அரசில் தலிபான்களின் பயங்கரவாத அமைப்பின் நிறுவனர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் என எல்லோராலும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் புதிய அரசு அமைப்பது தொடர்பாக அவர்களுக்குள்ளும், ஹக்கானி வலை குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடந்தது.
அப்போது குழுவின் தலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும், ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் இந்த வாக்குவாதம் முற்றி கைகலப்பாக மாறியது. இந்த மோதலில் போது தலிபான்களின் தலைவர் பரதர் காயமடைந்தார்.
இதனை தொடர்ந்து இரு தரப்புக்கும் இடையே இந்த பிரச்சினையை சுமுகமாக பேசித் தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தானின் உளவு அமைப்பின் தலைவர் ஹமீது காபூலுக்கு விரைந்தார். அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக அங்கிருந்து வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில் இடைக்கால அரசு அமையும் எனவும் தலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் கூறியுள்ளார்.