அதிமுக கூட்டணியில் குழப்பமா…! குஷியில் எதிர்க்கட்சிகள்…!

0
116

அதிமுகவில் முதல்வர் வேட்பாளர் யார் என்ற விவகாரம் ஒரு முடிவிற்கு வந்து இருந்தாலும், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெறப்போகும் கட்சிகள் எந்தெந்த கட்சிகள் என்பது சம்பந்தமான தகவல்கள் இன்னும் உறுதியாகவில்லை. திராவிட முன்னேற்ற கழக கூட்டணியில் காங்கிரஸ் விடுதலை சிறுத்தைகள் மற்றும் இடதுசாரிகள் மதிமுக உள்ளிட்ட கட்சிகள் சேர்ந்து போட்டியிடப்போவதாக உறுதியான தகவல் வெளியாகியிருக்கிறது. அக்கூட்டணியின் ஆலோசனை கூட்டம் ஏதோ ஒரு சில பிரச்சனையின் காரணமாக அடை விழுகின்றனர்.

ஆனாலும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் இந்த கட்சிகள் தான் இடம் பெறப் போகின்றன என்று அதிகாரபூர்வமான உறுதியான தகவல் எதுவும் வெளியாகாத நிலையே தொடர்கிறது. ஆனால் அதிமுகவை பொருத்தவரையில் பாரதிய ஜனதா கட்சியை கூட்டணியில் ஏற்க விருப்பமில்லாமல் இருப்பதாகவே தெரிகிறது.

ஆனாலும் அதிமுகவின் கூட்டணியில்தான் நாங்கள் இருக்கின்றோம் என்று தடாலடியாக பாரதிய ஜனதா தெரிவித்துக் கொண்டு தான் இருக்கின்றது. பாஜக என்னதான் கூட்டணியில் தான் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டாலும் அக்கட்சியிடமிருந்து விலகியே தேர்தல் பணிகளை போனமுறை அதிமுக செய்து வந்திருக்கிறது. ஆனாலும் பாரதிய ஜனதா தனித்து போட்டியிடும் என்று கூட சொல்ல ஆரம்பித்து இருக்கிறது.

இதேபோல அதிமுக கூட்டணியில் இருக்கும் பாட்டாளி மக்கள் கட்சியும், தேமுதிகவும், வழக்கம்போலவே அனைத்துக் கட்சிகளுடனும் கூட்டணி பேச்சுவார்த்தையில் ஈடுபட தயாராக இருக்கின்றது. திமுகவோ, பாமகவை எப்படியேனும் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட வேண்டும் என்று தீவிரமான முயற்சியில் ஈடுபட்டுவருகிறது, தேமுதிகவுடன் சில மாதங்களுக்கு முன்பே திமுக சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டிருக்கிறது, ராஜ்யசபா சீட் மற்றும் 20 தொகுதிகள் என்ற ஒரு பார்முலாவை இதற்காக திமுக முன்னெடுக்கிறது. இந்த முடிவை உடனே தேமுதிக தலைமை ஏற்றுக்கொள்ளவும் இல்லை. அக்கட்சி வழக்கம்போல் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளுடனும் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது. இன்றைய சூழ்நிலையில் அதிமுக கூட்டணியில் கண்ணுக்கெட்டிய தொலைவில் எந்த ஒரு கட்சியும் இல்லை என்ற நிலையே இருக்கிறது.

Previous articleகையை கிழித்துக் கொண்டு ரத்தம் சொட்டச்சொட்ட வீடியோ எடுத்து காதலிக்கு அனுப்பி நிர்வாண புகைப்படம் கேட்ட காதலன்!
Next articleவாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர்களை சேர்க்க சிறப்பு முகாம் அமைப்பு !! தமிழக அரசு !!