ஒரே ஒரு வரியில் மத்திய அமைச்சருக்கு அதிர்ச்சியளித்த இசையமைப்பாளர்!

0
137

தற்போது இந்திய இசை உலகின் முடிசூடா மன்னனாக திகழ்ந்து வருபவர் ஏ ஆர் ரகுமான் சற்றேறக்குறைய 20 வருடங்களுக்கு மேலாக இசை உலகில் இளைஞர்களின் நம்பிக்கை நாயகனாக திகழ்ந்து வருபவர் இசைப்புயல் ஏ ஆர் ரகுமான்.

அவர் ஒரு திரைப்படத்துக்கு இசையமைக்கிறாறென்றால் எந்த வித கேள்வியும் எழுப்ப வேண்டாம் அந்த படம் சூப்பர் ஹிட் தான் என்று ரசிகர்களே முடிவு செய்து விடுவார்கள். அந்தளவிற்கு இளைஞர்களிடையே இவருக்கு வரவேற்பு இருந்து வருகிறது.

ஆனால் தற்சமயம் இவருக்கு போட்டியாக இளைஞர்களின் மனதை கவரும் விதமாக செயல்பட்டு வருபவர் இளம் இசையமைப்பாளர் அனிருத், அவர் இசையமைக்கும் திரைப்படங்கள் அனைத்திலும் பாடல்களெல்லாம் ஒரு வித்தியாசமாக காணப்படும். அவரிடம் தென்படும் வித்தியாசத்திற்காகவே அவருக்கு ரசிகர்கள் குவிந்திருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த நிலையில், டெல்லியில் நடந்த நாடாளுமன்ற அலுவல்மொழி குழுவின் 37வது கூட்டத்தில் உரையாற்றிய மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாட்டின் ஒருமைப்பாட்டின் முக்கிய அங்கமாக இந்தியை அலுவல் மொழியாக மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என தெரிவித்தார்.

இந்தியாவின் மொழியான இந்தியை வெவ்வேறு மாநிலங்களில் உள்ள குடிமக்கள் ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள பயன்படுத்தவேண்டும் இந்தியைப் தான் ஆங்கிலத்திற்கு மாற்றாக கருதவேண்டும் என தெரிவித்தார்.

அதோடு நாட்டின் தேசிய மொழி இல்லை என்றாலும்கூட இந்திதான் நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியாகும் என்று அவர் உரையாற்றியிருந்தார் அவருடைய இந்தக் கருத்து நாடு முழுவதும் கடுமையான விமர்சனத்திற்குள்ளானது.இந்த சூழ்நிலையில், சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடந்த தென்னிந்திய ஊடகம் பொழுதுபோக்கு கருத்தரங்கில் இசையமைப்பாளர் ஏ ஆர் ரகுமான் பங்கேற்றார்.

அப்போது அவரிடம் இந்தியாவிற்கு இந்தி தான் இணைப்பு மொழி என்று மத்திய அமைச்சர் கூறியிருக்கிறாரே என கேள்வியெழுப்பியதற்கு பதில் அளித்த அவர், தமிழ்தான் இணைப்பு மொழி என்று ஒற்றை வரியில் பதிலளித்தார். அவருடைய இந்த பதிலை தமிழர்கள் கொண்டாடி வருகிறார்கள் அதோடு மட்டுமல்லாமல் ஏ ஆர் ரகுமானை பல்வேறு தரப்பினரும் வெகுவாக பாராட்டி வருகிறார்கள்.

அதோடு ஆஸ்கர் விருதை வாங்கிய இசையமைப்பாளர் ஒருவர் தமிழை பெருமைப்படுத்தி உரையாற்றியது தமிழர்களிடையே குதூகலத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதோடு மத்திய அமைச்சர் ஒருவரின் கருத்துக்கு எதிராக ஒரே வரியில் கருத்து தெரிவித்திருப்பது மத்திய அரசுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

Previous articleஐபிஎல் போட்டியில் 150 விக்கெட்டுகளை கைப்பற்றிய 6வது இந்திய வீரர் யார்! அந்த சாதனையின் நாயகன்?
Next articleமாவட்ட ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு! குதூகலத்தில் பள்ளி மாணவ மாணவிகள்!