பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்ற பெற்ற KKR!! வாழ்த்து தெரிவித்த RRR படக்குழு!!

Photo of author

By Sakthi

பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் வெற்ற பெற்ற KKR!! வாழ்த்து தெரிவித்த RRR படக்குழு!!
நேற்று அதாவது மே 8ம் தேதி நடந்த பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற கேகேஆர் அணிக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு வாழ்த்து தெரிவித்து டுவீட் செய்துள்ளது.
நேற்று கொல்கத்தாவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று பஞ்சாப் அணி முதலில் பேட் செய்து 7 விக்கெட் இழப்பிற்கு 179 ரன்கள் எடுத்தது. இதையடுத்து களமிறங்கிய கொல்கத்தா 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து வெற்றி பெற்ற கொல்கத்தா அணிக்கு ஆர்.ஆர்.ஆர் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.
நேற்றைய போட்டியின் வெற்றிக்கு பிறகு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி டுவிட்டர் பக்கத்தில் நிதிஷ் ராணா(R), ரிங்கு சிங்(R), ரஸல்(R) ஆகிய மூன்று வீரர்களின் படங்களை வைத்து “எங்கள் கேகேஆர் வீரர்கள் ஆர்ஆர்ஆர் திரைப்படத்தின் அடிச்சுவடுகளை பின்பற்றுகிறார்கள்” என்று டுவீட் செய்திருந்தது. இந்த டுவீட்டை பார்த்த ஆர் ஆர் ஆர் படக்குழு “நேற்றைய போட்டியில் உங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது. இந்த கர்ஜணையை கடைசி வரையில் போட்டியில் காட்டுங்கள்” என்று வாழ்த்து தெரிவித்துள்ளது.