ADMK TVK CONGRESS: தமிழ் திரையுலகில் பிரபல நடிகராகவும், யாரும் அசைக்க முடியாத இடத்திலும் இருப்பவர் தான் விஜய். இவர் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சி தொடங்கியதிலிருந்தே அது அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதுவும் கரூர் சம்பவத்திற்கு பிறகு தவெக இன்னும் உச்ச நிலையை தான் எட்டியுள்ளது. இந்த விபத்திற்கு பிறகு பாஜக விஜய்யை கூட்டணியில் சேர்ப்பதற்கு பல்வேறு முயற்சிகளை செய்து வருகிறது. ஆனால் விஜய் அதற்கு இணங்கி வருவதாக தெரியவில்லை.
விஜக்கு அதிமுக அல்லது காங்கிரஸ் பக்கம் தான் செல்லும் ஐடியா இருக்கிறது என்று தவெக வட்டாரங்ககள் கூறுகின்றன. அதிமுக கூட்டணிக்கு சென்றால் விஜயகாந்தின் நிலைமை வந்து விடுமோ என்று விஜய் பயப்படுகிறார். அதுமட்டுமல்லாமல் அதிமுக கூட்டணியில் விஜய்க்கு துணை முதல்வர் பதவி தான் வழங்கப்படும் என்று கூறியதால், அக்கட்சியுடன் கூட்டணியில் சேர்வதற்கு விஜய் தயங்குகிறார். சரி, காங்கிரஸ் உடன் கூட்டணி அமைக்கலாம் என்று பார்த்தால் அதிமுகவிற்கு தமிழகத்தில் இருக்கும் அந்தஸ்தும், மதிப்பும் காங்கிரசிற்கு இல்லை.
ஆனால் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முதல்வர் வேட்பாளராக விஜய் இருக்க சம்மதம் தெரிவித்ததாகவும் சிலர் கூறுகின்றனர். தவெகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் அதிமுக கூட்டணியில் சேர்ந்தால் தான் ஆட்சி அமைக்க முடியும் என்றும், பிறகு 2031 தேர்தலில் தனித்து போட்டியிடலாம் என்றும் அறிவுரை கூறியதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்நிலையில் முதல்வர் வேட்பாளரா இல்லை தமிழகத்தில்,வலுவாக நிலைபெற்ற கட்சியுடன் கூட்டணியா என்று விஜய் குழப்பத்தில் உள்ளார்.