DMK CONGRESS: பீகாரில் NDA கூட்டணி மாபெரும் வெற்றி பெற்றது எந்த அளவிற்கு பேசப்பட்டதோ, அந்த அளவிற்கு காங்கிரஸ் படுதோல்வி அடைந்ததும் பேசப்பட்டது. 50 ஆண்டுகளாக இந்தியாவை ஆட்சி செய்த காங்கிரஸ் பீகாரில் வெறும் 6 இடங்களில் மட்டுமே வென்றது பீகாரில் மட்டுமல்ல அனைத்து மாநிலத்திலும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிலும் முக்கியமாக தமிழகத்தில் திமுக கூட்டணியில் அதன் மதிப்பு குறைந்து விட்டதாக பார்க்கப்படுகிறது. பல ஆண்டுகளாக திமுக கூட்டணியில் அங்கம் வகித்து வரும் காங்கிரஸ் பீகார் தேர்தலுக்கு முன்பு வரை திமுகவிடம் அதிக தொகுதிகள், ஆட்சி அதிகாரம் போன்றவற்றை வலியுறுத்தி வந்தன.
ஆனால் தேர்தல் முடிவுக்கு பின்னர் காங்கிரஸ் அமைதியாகிவிட்டது. இந்நிலையில் காங்கிரஸின் தோல்வி குறித்தும், திமுக கூட்டணியில் அதன் நிலை குறித்தும் பேசிய மூத்த பத்திரிகையாளர் மணி, விஜய் காங்கிரஸுக்கு ஒன்னும் புதுசு இல்ல என்று கூறும் காங்கிரஸ், விஜய்யை காரணம் காட்டி திமுகவிடம் அதிக தொகுதிகள் கேட்பதை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என்று கூறினார். மேலும் தமிழகத்தில் காங்கிரஸ் தனித்து நின்றால் ஒரு சீட் கூட ஜெயிக்க முடியாது என்றும் திட்ட வட்டமாக தெரிவித்தார். அது மட்டுமல்லாமல், காங்கிரஸ் பீகாரில் தோற்றத்தை அதிமுகவை விட அதிகம் விமர்சித்தது திமுக தான் என்றும் அவர் கூறியுள்ளார்.
திமுக தான் காங்கிரஸை அதிகம் விமர்சித்துள்ளது என்ற இவரது கூற்று, திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு மதிப்பு குறைந்து விட்டது என்பதை நிரூபித்திருக்கிறது. பீகாரில் தோல்வி அடைந்த காங்கிரஸ், தமிழக சட்டமன்ற தேர்தலை நம்பி இருக்கும் சூழலில் திமுக கூட்டணியில் மதிப்பு குறைந்தால், அதன் அடுத்த கட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். தற்போது இருக்கும் நிலைமையில் விஜய்யுடனும் கூட்டணி சேர காங்கிரஸ் யோசிப்பதால், தமிழக தேர்தலிலும் அதன் நிலை கேள்விக்குறியாகும் என்றே பலரும் கூறுகின்றனர்.

