அவர் என்ன ராணுவ தளபதியா!காங்கிரஸ் சரமாரிக்கேள்வி!

Photo of author

By Sakthi

அவர் என்ன ராணுவ தளபதியா!காங்கிரஸ் சரமாரிக்கேள்வி!

Sakthi

பிரதமர் நரேந்திர மோடி எவ்வாறு ராணுவ சீருடையை அணியலாம் என காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கின்றது. மோடி பிரதமராக பதவி ஏற்ற நாள்முதல் தீபாவளிப் பண்டிகையை ராணுவ வீரர்களுடன் கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார். தொடர்ச்சியாக ஏழாவது முறையாக இந்த வருடமும் தீபாவளி பண்டிகை இராணுவ வீரர்களுடன் பிரதமர் கொண்டாடினார்.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மரில் இருக்கின்ற ராணுவ முகாமில் ராணுவ வீரர்களுடன் பிரதமர் தீபாவளியை கொண்டாடினார். பிரதமர் நரேந்திர மோடியுடன் முப்படைகளின் தலைமைத் தளபதி பிபின்ராவத், மற்றும் முப்படைகளின் தளபதிகளும், இதில் பங்கு பெற்றன.

ஜெய்சல்மரில் எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் முகாம்களில் பிரதமர் நரேந்திர மோடி இராணுவ சீருடையுடன் ராணுவ வீரர்களுடன் தீபாவளியை கொண்டாடி இருக்கின்றார். பிரதமர் மோடி ராணுவ உடையை அணிந்து இருந்தது சம்பந்தமாக காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி இருக்கின்றது.

இளைஞர் காங்கிரஸ் அணி தன்னுடைய வலைதள பக்கத்தில், பிரதமர் நரேந்திர மோடி ராணுவ தளபதியா, அல்லது அதிகாரியா,அவர் ராணுவ சீருடை அணிவது எந்த விதத்தில் பொருத்தமானது? என கேள்வி எழுப்பியதோடு, பிரதமர் நரேந்திர மோடி ராணுவ சீருடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கின்றது.