CONGRESS DMK: சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 6 மாத காலமே உள்ள நிலையில் திமுக கூட்டணி கட்சிகளிடையே பேச்சு வார்த்தை நடத்தி வருகிறது. அதோடு ஓரணியில் தமிழ்நாடு என்ற தலைப்பில் மக்களை சந்திக்கும் பணியிலும் ஈடுப்பட்டுள்ளது. இந்நிலையில், அதிமுகவில் உட்கட்சி பூசல் தொடர்ந்து வண்ணம் உள்ளதால், திமுக அதன் கூட்டணி கட்சிகளின் பலத்தில் சிதைவு ஏற்படாமல் பாதுகாத்து வருகிறது.
ஆனால் கூட்டணி கட்சிகளோ புதிய புதிய அழுத்ததை திமுக தலைமைக்கு கொடுத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் கே.எஸ். அழகிரி ஆட்சியில் பங்கையும், அதிக தொகுதிகளையும் கேட்போம் என்றும், மேலும் திமுகவின் கோட்டையாக திகளும் ஓரு தொகுதியையும் எங்களுக்கு தர வேண்டும் என்றும் கூறியிருந்தார்.
இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் மீதமிருக்கும் 6 மத காலத்திற்காவது துணை முதல்வர் பதவியை திருமாவளவனுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி கூட்டணி கட்சிகளிடையே சலசலப்பை ஏற்படுத்தினார். இதனை தொடர்ந்து காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரும் கூட்டணி கட்சிகளுக்கு காங்கிரஸ் போதுமான அளவு தியாகங்களை செய்து விட்டது. அது போதுமென்று நினைக்கிறேன், இனிமேல் ஆட்சியில் பங்கை கேட்பதை பற்றி தான் காங்கிரஸ் கட்சியில் விவாதிக்கபடும் என்று கூறினார்.
இதன் சூடு கூட தனியாத சமயத்தில், கன்னியாகுமரி காங்கிரஸ் எம்.பி. விஜய் வசந்த தமிழகத்தில் ஆட்சியில் பங்கு, அதிகாரத்தில் பங்கு என்பது தான் அனைத்து காங்கிரஸ் தரப்பினரின் விருப்பம் என்று தெரிவித்துள்ளார். இந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் அதிக சீட்டுக்கள் வாங்குவதில் உறுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறு காங்கிரஸ் கட்சிகள் தொடர்ந்து அதிக தொகுதிகளையும், ஆட்சி பங்கையும் வலியுறுத்துவது காங்கிரஸ் தலைமையின் திட்டமிட்ட சதி என்றும் உடன்பிறப்புகள் கூறி வருகின்றனர்.