விஜய்க்காக பொங்கி எழுந்த காங்கிரஸ் எம்.பி.. ஜனநாயகனுக்கு ஆதரவு குரல்.. திமுகவிற்கு ஏற்பட்ட பின்னடைவு..

TVK DMK CONGRESS: 2026 மார்ச் மாதத்தில் தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நடக்க இருப்பதால், தேர்தல் தேதி பிப்ரவரி மாதமே அறிவிக்க இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுமென்று எதிர்பார்க்கப்படுகிறது. அதிமுக, திமுக என இருந்த தேர்தல் களம் தற்போது நாதக, தவெகவின் வருகையையும் எதிர்கொண்டுள்ளது. விஜய்யின் அரசியல் வருகை திராவிட கட்சிகளுக்கு இணையான அளவு ஆதரவு பெற்றுள்ளது. இதனால் இவருடன் கூட்டணி அமைக்க பல கட்சிகளும் முந்தியடித்தன. அதில் முதன்மையான கட்சி பாஜகவும், அதிமுகவும் தான். பாஜக, தவெகவின் கொள்கை எதிரி என்பதால் விஜய் அவர்களுடன் கூட்டணி சேர மறுத்து விட்டார். விஜய் காங்கிரசுடன் மிகவும் நெருக்கம் காட்டி வந்ததால் தவெக-காங்கிரஸ் கூட்டணி அமையுமென்று கூறப்பட்டது. காங்கிரசின் சில செயல்பாடுகளும் அதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்தது.

ஒரு மாதத்திற்கு முன்பு காங்கிரஸ் கட்சியின் முக்கிய முகமான பிரவீன் சக்ரவர்த்தி விஜய்யை நேரில் சந்தித்து பேசியிருந்தார். மேலும் காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், ஆட்சியில் பங்கு கேட்க வேண்டிய நேரம் இது என்று கூறி தவெக கூட்டணிக்கு அடித்தளமிட்டார். 19 ஆண்டுகளாக திமுக கூட்டணியில் தொடர்ந்து வரும் காங்கிரஸ், விஜய் வருகையால் பிரியும் போக்கை காட்டி வருவது திமுக தலைமைக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வாறான நிலையில் ஸ்டாலினுக்கு மேலும் அதிருப்தியை ஏற்படுத்தும் வகையில் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். 2026 தேர்தலில் போட்டியிடுவதாக தவெக அறிவித்த நிலையில், விஜய்யின் கடைசி திரைப்படமான ஜனநாயகனுக்கு சென்சார் சான்றிதழை மத்திய அரசு வழங்காத விவகாரம் குறித்து பேசிய  ஜோதிமணி, ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வரும் தணிக்கை வாரியம் ஜனநாயகன் திரைபடத்திற்கு தணிக்கை சான்றிதல் வழங்காததை கண்டித்த அவர், இது தமிழ் சினிமாவின் மீது நடத்தப்படும் தாக்குதல் ஆகும்.

நூற்றுக்கணக்கானனோர் உழைப்பில் உருவான திரைபடத்தை முடக்க நினைப்பது படைப்பு சுதந்திரத்திற்கு எதிரானது என்று கூறியுள்ளார். மேலும், அரசியல் காரணங்களுக்காக படத்தை முடக்குவது ஆபத்தானதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இவரின் இந்த கருத்து, முழுக்க முழுக்க விஜய்க்கு ஆதரவாகவே பார்க்கப்படுகிறது. இவர் ஏற்கனவே ஒரு முறை, விஜய் காங்கிரஸ் கட்சிக்கு புதியவர் இல்லை என்று கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். இவ்வாறு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பலரும் விஜய்க்கு தொடர்ந்து தெரிவித்து வருவதால் தவெக தலைமையில் காங்கிரஸ் கூட்டணி உருவாகும் என்று அரசியல் வல்லுனர்கள் கூறுகின்றனர்.