CONGRESS NTK TVK: தமிழக அரசியல் அரங்கில் பல்வேறு திருப்பங்கள் நிகழ்ந்து வரும் வேளையில், நீண்ட காலமாக தனித்து நின்று தேர்தலை சந்தித்து வரும் நாதகவை கூட்டணியில் சேர்க்க காங்கிரசும், தவெகவும் முயற்சித்து வருவது பரபரப்பை கிளப்பியுள்ளது. நாம் தமிழர் கட்சி தொடங்கபட்டதிலிருந்தே யாருடனும் கூட்டணி இல்லை, கடைசி வரை தனித்து நின்று தான் களம் காணுவோம் என்று கூறி அவர்களது கொள்கையில் உறுதியாக உள்ளனர். இந்த காலகட்டத்தில் எந்த ஒரு கட்சியாலும் தனித்து நின்று ஆட்சியை பிடிப்பது கடினம். ஆனால் நாதக தனித்து நின்றே குறிப்பிட்ட அளவு வாக்குகளை சேகரித்துள்ளது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.
இந்நிலையில் இவரின் வாக்குகளை கவர நினைக்கும் பாஜக, காங்கிரஸ், தவெக போன்ற கட்சிகள் அவரை கூட்டணியில் சேர்க்க முயற்சிப்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளது. நேற்று பாஜகவின் முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை, சீமானின் கட்சியை சாதாரணமாக எடைபோட கூடாது. அவர் அவரது கொள்கையில் உறுதியாக உள்ளார். அவரது கொள்கை எனக்கு பிடிக்கிறதோ இல்லையோ, அது இரண்டாம் பட்சம். ஆனால் அவர் தேர்தலுக்கு தேர்தல் நிற்கிறார் என்று பாராட்டி இருந்தார். இவரின் கருத்து புகைச்சலை கிளப்பிய நிலையில் தற்போது புதிதாக, காங்கிரஸ் கட்சியின் நிர்வாகியான கார்த்திக் சிதம்பரம், நாதகவை பற்றி புகழ்ந்து பேசியது தற்போது வைரலாகியுள்ளது.
இது குறித்து பேசிய அவர், தமிழ்நாட்டில் தனியாக நிற்கின்ற ஒரே கட்சி நாதக மட்டும் தான். அவர்களுக்கு மட்டும் தான் எவ்வளவு வாக்கு சதவிகிதம் இருக்கிறது என்பது தெளிவாக தெரியும், மற்ற கட்சிகள் அனைத்தும் கூட்டணி அமைத்துள்ளதால் அவர்களின் வாக்கு வங்கியை கணிக்க முடியவில்லை என்று கூறியிருக்கிறார். இவரின் இந்த பேச்சு நாதகவை கூட்டணியில் சேர்பதற்கான தந்திரமாக தெரிகிறது என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர். மேலும் தவெக உடன் தற்போது வரை எந்த கூட்டணியும் உறுதியாகததாலும், நாதகவுக்கு தமிழகத்தில் நல்ல செல்வாக்கு இருப்பதாலும், விஜய் காங்கிரஸ் மூலம் சீமானை கூட்டணியில் சேர்க்க முயற்சிகிறார் என்று மூத்த அரசியல் நிர்வாகிகள் கூறுகின்றனர். விஜய்க்கும் அரசியலில் அதிக ஆதரவு இருப்பதால், சீமான் விஜய்யுடன் கை கோர்ப்பார் என்று பலரும் கூறுகின்றனர்.