அதிகமாக பேசும் நபரா நீங்கள்? கட்டாயம் இதை மட்டும் செய்யாதீங்க..!

Photo of author

By Priya

Consequences of Talking Too Much: நம்மை சுற்றி பல குணங்கள் படித்த மனிதர்கள் உள்ளனர். ஆனால் ஒருவர் போல் மற்றவர்கள் உள்ளார்களா? என்று பார்த்தால் அப்படி யாரும் இருக்க மாட்டார்கள். ஒவ்வொரு மனிதரும் ஒரு தனித்துவமான குணம் படைத்தவர்களாக இருப்பார்கள். ஒருவர் எப்பொழுது பார்த்தாலும் அமைதியாக இருப்பார்கள். மற்றொருவர் பேசிக்கொண்டே இருப்பார்கள். மற்றவர்கள் எப்பொழுது பேச வேண்டுமோ அப்பொழுது மட்டும் தான் பேசுவார்கள். இவ்வாறாக மனிதர்களின் குணங்கள் வேறு வேறாக இருக்கும்.

மேற்கூறியவாறு சில மனிதர்கள் எப்பொழுதும் பேசிக்கொண்டே இருப்பார்கள். அவ்வாறு பேசுவதால் அவர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகள் பற்றியோ அல்லது அவர்கள் பேசிய வார்த்தையினால் மற்றவர்களுக்கு ஏற்படும் பாதிப்பை பற்றியோ அவர்கள் அறிந்திருப்பார்களா என்றால் சந்தேகம் தான். ஒருவர் அதிகமாக பேசினால் என்ன விளைவுகள் ஏற்படும் என்பதை பற்றி பார்க்கலாம்.

அதிகமாக பேசுபவர்கள்

ஒருவர் அதிகமாக பேசுவதை தவிர்ப்பதற்காக தான் திருவள்ளுவர் யாகாவாராயினும் நாகாக்க என கூறியுள்ளார். அதாவது நம்மால் எதை காக்க முடியாவிட்டாலும் கட்டாயம் நம்முடைய நாக்கை காக்க வேண்டும் என கூறியுள்ளார். ஒருவர் மனது புண்படும் படி நாம் பேசிவிட்டால் அந்த சொல்லை நம்மால் மீண்டும் பெறவே முடியாது. அது மற்றவர்களை மனதளவில் காயப்படுத்தி இருக்கும்.

மேலும் ஒருவர் அதிகமாக பேசுவது என்பது தவளை தன் வாயால் கெடும் என்பது போல் ஆகிவிடும். அதிகமாக பேசுபவர்கள் ஒருவரை பற்றி என்ன நினைக்கிறாேரே அதனை அப்படியே அவர் முன்போ அல்லது வேறு யாரிடமாவதோ கூறிவிட்டு பின்னால் அதனால் அவருக்கு பிரச்சனை ஏற்பட்டு வம்பில் மாட்டிக்கொள்வார்கள்.

மனதில் பட்டதை பேசுவது தவறா என்று கேட்டால், ஒருவரை பற்றிய கருத்தை மற்றவர்களிடம் கூறுவது எந்த பயனும் அளிக்க போவதில்லை. மேலும் ஒருவர் மீது உள்ள வெறுப்பையும், கோபத்தையும் எப்படி காட்டுவது என்று தெரியாமல் அதிகமாக வெறுப்பு பேச்சுக்களை பேசிவிட்டு பிறகு வருத்தப்படுவது சரியல்ல.

அதிகமாக பேசுபவர்கள் செயலில் ஒன்றும் காட்டமாட்டார்கள். நான் நினைத்தால் என்ற வார்த்தை தான் முதலில் வருமே தவிர வேறு செயல்களில் தங்களை நிரூபிக்க மாட்டார்கள்.

அதிகம் பேசுவதை குறைப்பதால் ஏற்படும் நன்மைகள்

நாம் அதிகமாக பேசுவதை குறைத்துக்கொண்டால் நாம் மற்றவர்களை பற்றி சிந்திப்பது குறைந்து விடும். மேலும் சிந்திக்கும் திறனும் ஏற்படும். அதனால் பேசுவதை விட நாம் செய்கின்ற வேலைக்கு முக்கியத்துவம் கொடுக்க நினைப்போம்.

ஒருவர் அதிகமாக பேசுகிறார்கள் என்றால் அவர்களின் நண்பர்கள் வட்டமும் அதிகம் பேசுபவர்களாக இருக்கலாம். எனவே நீங்கள் அமைதியாக இருந்தீர்கள் என்றால் மற்றவர்களின் பார்வை, ஈர்ப்பு உங்களை நோக்கி இருக்கும்.

மேலும் அதிகமாக பேசுபவர்கள் தங்களிடம் எவ்வித  திறமையும் இல்லாத போது தான் இவ்வாறு பேசிக்கொண்டே இருப்பார்கள். இதனால் மற்றவர்கள் இவர்களிடம் நட்பு பாராட்ட மாட்டார்கள்.

குறைவான பேசுவதால் நாம் சொல்ல வரும் கருத்துக்களை நாம் தெளிவாகவும், நியாயமாகவும் கூற இயலும். பேச்சில் தெளிவு இருக்கும்.அதனால் மற்றவர்கள் சுலபமாக உங்களின் பேச்சுகளை நம்புவார்கள்.

குறைவாக பேசுபவர்களுக்கு எப்பொழுதும் நாம் என்ன பேசுகிறோம், என்ன பேசினோம் என்கிற தெளிவு இருக்கும். அதிகமாக தான் பேசக்கூடாதே தவிர, பேச வேண்டிய நேரத்தில் கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்.

மேலும் படிக்க: உங்களுக்கு இந்த அறிகுறிகள் உள்ளதா? அப்போ இவர்கள் தான் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார்கள்..!